உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 13

ஞானாம்பாளைத் தழுவிக்கொள்ளும் பொருட்டு ஒரு கணப் பொழுது பின்னே நீடித்து நின்றாள்.

திகழ்கலையைச் சில நிமிஷநேரம் அங்குள்ள படுக்கை யறைகளில் ஒன்றில் இருக்கும்படி கற்பித்துவிட்டுக், குமுதவல்லி குளியலறைக்குட் சென்றாள். அங்கே தான் அணிந்திருந்த அணிக்கலன்களையெல்லாம் கழற்றி ஓர் அலமாரியுள் பேணிவைத்தாள். விலைமதித்தற்கரிய அம்மந்திர மோதிரத் தையும் தனது பணப் பையையும் அவற்றோடு சேர்த்து அங்கே வைக்க அவள் மறந்து விடவில்லை; ஏனென்றால், கொள்ளைக் காரரின் ஆசையை எழுப்புதற்குரிய அணிகல னாவது நாணய மாவது சிறிதுத் தன்னிடத்தில் இருக்கலாகா தென்று அவள் தீர்மானித்தாள். அவள் அலமாரியை கருத்தாய்ப் பூட்டத் தான் திரும்பிவராவிடினும் சிறிது தேடிப்பார்த்தால் திண்ணமாய்க் கண்டுபிடித்ததற்கு இசைந்த ஓர் இடத்தில் அதன் சாவியை வைத்தாள். பின்னர் ஒரு துப்பட்டியினால் தன்னை மூடிக் கொண்டு, தோட்டத்தின் கடைசியிலுள்ள நுழை வாயிலைத் திறப்பதற்குரியதும் அவ்வீட்டு முதியோள் கூறியபடி அம் மஞ்சணச் சாலையிற் கண்டெடுக்கப்பட்டதுமான சாவியைக் கையிற் பற்றினவளாய்த் தான் புறப்படுதற்குச் சித்தமாயிருப்பதைத் திகழ்கலைக்குஞ் சுந்தராம்பாளுக்குங் குறிப்பித்தாள். அவ்வறி வோள் தன் கண்களை மாத்திரம் திறப்பாகவிட்டுத், தன் முகத்தையெல்லாம் சணல் நூற்றுணி யினால் முக்காடிட்டுக் கொண்டாள்; சுந்தராம்பாளும் தனது போர்வையினால் முக்காடிட்டுக் கொண்டாள். அம்மூவரும் மறைபடிக்கட்டின் வழியாய்த் தோட்டத்தினுள் இறங்கி னார்கள். விரைந்துசூழும் மசங்கல் மாலைப் பொழுதினிடையே அதிற் கடுகி நடந்தார்கள்; கடை சியில் சுவரிலுள்ள நுழை வாயிலண்டை வந்து சேர்ந்தார்கள். குமுதவல்லியினிடமிருந்த சாவியால் அதனைத் திறந்து அங்கு நின்றும் வெளிப் பட்டார்கள்; இப்போது திகழ்கலை அடுத்துள்ள தெருக்களி னூடே வழி காட்டிச் செல்ல லானாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/237&oldid=1581510" இலிருந்து மீள்விக்கப்பட்டது