உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

அதனை

அதிகாரம் - 13 சமயச் சடங்கு

குமுதவல்லிக்கு உரிய நாட்டின் நிலைமையை எண்ணிப் பார்க்குங்கால், அவள் இயற்கையறிவும் சிறந்த கல்வி யுணர்ச்சியும் மிகுந்த தெளிவும் உடையவளாயிருந்தாள், அவளது உள்ளம் சைவசமய உண்மைகளால் ஆழ நிறைக்கப் பட்டிருந்தது. மேற்கணவாய் மலைப்பக்கங்களிலே அச்சமயத் தின் மிகச் சுத்தமான உண்மைகள் அவல நம்பிக்கைகள் பலவற்றோடுங் கலந்திருந்தமையால், குமுதவல்லியின் உள்ளமும் அந்நம்பிக்கை களிற் பிணைப்புண்டிருந்தது. இப்போது தான் மயக்குற்று நடக்கும் நம்பிக்கையைப்பற்றி அவளது இயற்கை நல்லறிவு ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும்படி தூண்டப்படு மானால், அஃதொரு மூடநம்பிக்கையேயல்லாமற் பிறிதில்லை யென்னும் ஒரு முடிபுக்கு அவள் வரக்கூடும். ஆனால் இதற்குமுன் அவள் எண்ணிப்பார்க்கும்படி தூண்டப்படவில்லை; இப்போதோ அவள் அதனை மன அமைதியோடிருந்து ஆய்ந்து பார்க்க ஒழிவில்லை. இன்னுந் தெளிந்த அறிவுள்ள நாடுகளில் மனவுரம் மிகுந்தோர் பலர் இத்தகைய அவல நம்பிக்கைகளுக்கு இணங்கியொழுகுமாறு போலவே, இவளும் இதற்கு ஒருப்பட்டு நடப்பாளாயினள். முந்தின நாளில் மீனாம்பாளைப்பற்றி சேர்ந்த துயரமான நிகழ்ச்சிகள் குமுதவல்லியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. தான் உண்மையில் குமுதவல்லிக்குச் செய்த அல்லது செய்ய நினைத்த தீங்குகளுக்குப் பரிகாரமாகத் தான் இறக்குந் தறுவாயிற் சொல்லவேண்டுவன வெல்லாஞ் சொல்லி யொழிக்க, அந்நல்வினையில்லா மங்கையினிடத்து அவள் அளவுகடந்து இரக்கப்பட்டாள். ஆகவே, அம்மங்கையின் உயிர் அமைதிபெறும் பொருட்டு தான் இப்போது செய்தற்கு மேற்கொண்டதனைச் செய்யும் வகையில் இதனைப்படிப்பவர் முன்னரே அறிந்த அளவுக்குமேல், குமுதவல்லி பொழுது நீட்டித்தலின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/238&oldid=1581511" இலிருந்து மீள்விக்கப்பட்டது