உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் -13

ணங்கினாள்.அதாவது:

இணங்கினாள். அதாவது: கொள்ளைக்காரன் மனைவிக்கு உயிர் இருக்கையிலேயே அவளுக்குச் சொன்ன மன்னிப்பு மொழியைத் திரும்பவும் அவளது பிணத்தண்டை யிலிருந்து சொல்லுவதே யாம். இந்த அவல நம்பிக்கை ஒரு சிறந்த கருத்துப்பற்றியே எழுந்ததென்பதில் ஐயம் இன்று வலிய சில உணர்வுகளின் வசப்பட்ட நிலையில் மன்னிப்பு மொழிகள் சொல்லப்படலாம்; தன் பகைவனாயினுந் தனக்குத் தீங்கிழைத் தோனாயினும் தன் கண்ணெதிரே அழிந்துபடுகையில் ஒரு நொடிப்பொழுது தயாளகுணத்தால் உந்தப்பட்டும் மன்னிப்பு மொழிகள் சொல்லப்படலாம்; என்றாலும் பிணத்தின் பக்கத்தேயிருந்து சீர்தூக்கி வணக்க ஒடுக்கத்தோடுஞ் சொல்லப்படும் மன்னிப்பு மொழியில் உண்மையில் மிக்கதும் உறுதியிற் சிறந்ததும் ஆனது ஏதோயிருக்கின்றது.

.

குமுதவல்லி தான் செய்து முடிக்க உடன்பட்டதும் குருக்கள் மாரால் சமயக் கொள்கையிற் சேர்த்து வைக்கப் பட்டதுமான சடங்கின் நோக்கமும் தோற்றமும் அவையே என்பதில் ஐயமின்று. ஆயினும், நாம் முன்னரே கூறியபடி இவ்விஷயத்தைப்பற்றி எண்ணிப்பார்க்கக் குமுதவல்லிக்கு நேரமில்லை. முதலில் அவள் தன்னை அகப்படுத்தச் செய்த சூழ்ச்சியாயிருக்கலாமோ என்று மாத்திரம் நினைந்தாள். ஆனால் திகழ்கலையின் சொற்களையும் உறுதிமொழிகளையுங் கேட்டு அந்நினைவு தீர்ந்தவுடன், இறந்துபோனவுயிர் அமைதி பெறற்பொருட்டுத் தான் செய்வதற்குக் கடமைப்பட்டதனைச் செய்வது பரிசுத்தமான கடனென்றெண்ணினாள்.

இப்போது கிட்டத்தட்ட ஆள் வழக்கம் அடங்கிய தெருக்களினூடு வழி காட்டிக்கொண்டே திகழ்கலை போயி னாள். அந்த இளவேனிற்காலத்திடையில் வழக்கமாய் இருப் பதைக் காட்டிலும் மிகுந்த புழுக்கம் வாய்ந்த ஒரு நாளின் பிறகு அம்மாலைக் காலமானது இருண்டு மங்கித் தோன்றியது. அங்ஙனம் அவர்கள் போய்க்கொண்டிருக்கையில் வானத்தி லிருந்து பளீரென ஒரு மின்னல் தோன்றியது. அவர்கள் தம்முகத்தை மறைத்திருந்த முக்காடுமாத்திரம் இல்லாதிருந்த தாயின் அஃது அவர்கள் கண்களைக் குருடுபடுத்தியிருக்கும்.

அந்த மினுமினுப்பானது சிறிதுநேரம் அவ்விடத்தை முற்றும் ஒளிமயமாக்கி, அத்தெருவின் இருமருங்கினும் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/239&oldid=1581512" இலிருந்து மீள்விக்கப்பட்டது