உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

211

கட்டிடங்களை நொடிப்பொழுதேனும் நன்கு புலப்படக் காட்டியது. அதே நேரத்தில் எதிர்ப்பக்கத்தே விரைந்து போய்க்கொண்டிருந்த ஒருவனுடைய முகம் குமுதவல்லி பார்வைக்குத் தென்பட்டது. உடனே அவள் திகில்கொண்ட ஓர் ஐயத்தினாற் பற்றப்பட்டுச் சடுதியில் நின்றாள்; ஏனெனில், அவள் அங்ஙனங் கண்டது நீலலோசனன் முகத்தையே யாம்!- அச்சமூட்டும் நல்லானை யன்றிப் பிறன் அல்லன் என இன்னும் அவன் பிழைபட நம்பின அவ்வழகிய பௌத்தஇளைஞனது முகத்தையேயாம்! சடுதியில் மறைந்த அம்மின்னொளிக்குப் பின்னர் அங்குத் தோன்றிய இருள் முன்னிலும் கருமையாய்த் தோன்றியது, ஆகவே, குமுதவல்லியும் சுந்தராம்பாளும் தன்னைப் பின் றொடர்ந்து வந்தில ரென்பதனைத் திகழ்கலை உடனே காணக்கூடவில்லை.

அம்மின்னொளியானது

தன்

தலைவியைக் குருடு படுத்தியதோ அன்றி ஏதேனும் பழுது செய்ததோ வென்னும் நடுக்கம் வாய்ந்தவளாய் "அன்புள்ள பெருமாட்டி, யாது நேர்ந்தது!” என்று சுந்தராம்பாள் கேட்டனள்,

“ஒன்றுமில்லை-ஒன்றுமில்லை சுந்தராம்பாள்!” என்று கலக்கம் பாதியும் திகைப்புப் பாதியும் உடையளாய்க் குமுதவல்லி விடை கூறினாள்.

66

மெய்யாகவே மின்னலானது திகில்தரத் தக்கதாய்த் தான் இருந்தது!” என்று சுந்தராம்பாள் நடுக்கத் தோடு கூறினாள்; ஏனென்றால், குமுதவல்லியை அங்ஙனங் கலங்கப்பண்ணின அதேபொருளை அவள் காணும்படி நேரவில்லை. இப்போது குமுதவல்லி தன்பாங்கியோடு நின்று விட்ட இடத்திற்குத் திகழ்கலை திரும்பிவந்து, “பெருமாட்டி, நீங்கள் ஏன் என்பின்னே வரவில்லை?" என்று வினவித் “தங்களை வெருளச் செய்ததற்கு மேல் அம்மின்னலால் வேறு ஏதுந் தீங்கு நேராமல் கௌதம சாக்கியர் காக்கட்டும்" என்று கூறினாள். அவ்விளைய பெருமாட்டி இப்போது தன்நிலைக்கு வந்தவளாகி, “அம்மின் னொளியானது ஒவ்வொரு பொருளையும் தெளிவாய்ப் புலனாக்கியது; ஆனால், கட்பார்வையின் ஒளியோ மக்கள் நெஞ்சில் அத்தகைய பயனைத் தரமாட்டாது. திகழ்கலை, எனக்குள் ஐயுறவு நிகழ்கின்றது-” என்று கூறுகையில்,

·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/240&oldid=1581513" இலிருந்து மீள்விக்கப்பட்டது