உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் – 13

அவ்வறிவோள், “பெருமாட்டி, நாங்கள் இதுவரையில் துணிந்து வந்ததற்கு மேல் இனிவரவேண்டாமென்றும், நீங்கள் திரும்பிப்போகலாமென்றும் யான் சொல்லுவேன், ஆனால் அப்படிச் செய்வேனாயின் தங்களிடம் இப்போது பேசும் இவளைப்பற்றித் தாங்கள் கொண்ட ஐயம் அங்ஙனமே தங்கிவிடும் - அஃது அவ்வாறாகப்படாது! தங்களை வஞ்சித் தொழுக வல்லவள் அல்லேன் எனப்புத்தசாரணர் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்!இதோ, பெருமாட்டி, இந்தக் குத்துவாளை எடுத்துக் கொள்ளுங்கள்; தங்களைத் தீயோர்க்குக் காட்டிக் கொடுக்கிறேன் என்று நீங்கள் கண்ட அந்த நிமிஷமே, என் நெஞ்சில் இதனை அழுந்தப்பாய்ச்சுங்கள்!” என்றுரைத்தாள்.

“ஆம் - நான் இக்கருவியை வைத்துக்கொள்ளுகிறேன்” என்று சொல்லிக் குமுதவல்லி அதனைத் தன் அரையைச் சூழ்ந்த பட்டிகையில் செவ்வையாய் வைத்துக் கொண்டாள். "இப்போது யான் கேட்பதற்கு விடை சொல் திகழ்கலை! இப்போது என்னை அழைத்துக் கொண்டுபோக இருக்கும் இடத்தில், நம்மையும் இறந்துபோன அவ்வம்மையின் பாங்கி மாரையுந் தவிர வேறெவரேனும் வந்திருப்பரோ? வென்று நான் கேட்கிறேன்.”

-

“ஆம், பெருமாட்டி மற்றொருவரும் அங்கிருப்பர்.” என்று திகழ்கலை விடைகூறினாள்: “ஆயினும், புத்தசாரணர் அறிய அவர் தங்களுக்குச் சிறிதும் தீங்கு இயற்றத் தக்கவர் அல்லர் என்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! உங்களை நோக்கி ஒரு மாற்றங்கூட அவர் பேசமாட்டார்! தன் விரல்களில் ஒன்றே யேனும் அவர் உங்கள் மேல் வைப்பாரல்லர்! இப்போது தங்களுக்கு இசைவு தானா இன்னும் யான் யாது சொல்லக் கூடும்?”

“நல்லது வழிகாட்டிச் செல்” என்று குமுதவல்லி கூறினாள்.

தன் இளைய தலைவிக்கும் அவ்வறிவோளுக்கும் இடையிற் சுருக்கமாய் விரைந்து நிகழ்ந்த இப்பேச்சைச் சுந்தராம்பாள் மறுபடியும் எழுந்த கவலையோடும் ஐயுறவோடும் உற்றுக் கேட்டாள். இந்தத் தோழிப்பெண் தன் நாகநாட்டரசி திரும்பிவிடமாட்டாளா என்று தனக்குள் விரும்பினாள்; ஆயினும், அவள் முன்செல்லுதற்குத் தீர்மானங் கொண்டிருப் பதைக் கண்டு, நான் ஓரெழுத்தாலாவது தடுத்துப் பேசுவதற்குந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/241&oldid=1581514" இலிருந்து மீள்விக்கப்பட்டது