உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

213

துணிந்திலள். குமுதவல்லி திடீரென நின்ற காரணந் தெரியா மையால், வெருளத்தக்க மின்னலொளியைக் கண்டு அச்சுறுத்தப்பட்டவளாய் அவள் மெலிவுற்று நின்றாளெனவே சுந்தராம்பாள் தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

இப்போது குமுதவல்லி முற்றிலும் அச்சமும் ஐயுறவும் இல்லாமல் வழி நடக்க வில்லை. அவளுக்குத் திகழ்கலையைப் பற்றிச் சிறிது தான் தெரியும். மிகவுங் கொடுமையான ஒரு குற்றத்தைச் செய்யத் துணிந்த ஒருவர் தமது கருத்தை ஒளிக்கும் பொருட்டு நிரம்பிய அடக்க ஒடுக்கத்தோடும் சத்தியம் பண்ணப் பின் வாங்க மாட்டார் என்று அவள் எண்ணாமலிருக்க முடியவில்லை. என்றாலும், திகழ்கலையின் குரலிலும் மாதிரி யிலும் ஏதோ உண்மையிருந்தமையால், குமுதவல்லி முற்றிலும் ஐயப்பாட்டுக்கே இடங்கொடுத்து விடத் துணியவில்லை. இறந்துபோன மீனாம்பாளின் உயிருக்கு அமைதியைத் தருவதென்று நான் எண்ணிய ஒரு துணிவான செய்கையில் உறுதியிாய் நிற்றல் வேண்டுமென்னுங் கடமையினால் அவள் தூண்டப்பட்டாள்; உள்ளபடியே ஏதும் சூழ்ச்சி நினைக்கப் பட்டிராவிட்டால்- ஏதும் வலை விரிக்கப்பட்டிராவிட்டால்- அக்கடமையை நிறைவேற்றாமல் தான் திரும்பிவந்ததைப் பற்றித் தன்னையே தான் கொடுமையாய் இகழ்ந்து கொள்ள வேண்டியிருக்கும், மேலும், அவள் அப்பெண்பிள்ளையின் குத்துவாளைத் தான் வாங்கிவைத்துக்கொண்டாள்; தண்டனைக் குள்ளாகாமல் அப்பெண் தனக்கு ஏதுந் தீங்கு செய்ய முயலக் கூடாதென்று அவள் தீர்மானித்தாள். சிறிது நேரத்திற்கு முன்னே நான் நல்லானையே கண்டதாகத் துணிபு கொண்டவளாய் இறந்து போன தன்மனைவி கிடந்த இடத்திற்கு அவன் வரவேண்டுவது இயற்கையே யென்று குமுதவல்லி எண்ணி னாள்; இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே முடிவாக அக்கள்வர் தலைவன் அங்கு வந்திருப்பது எனக்கு ஏதுந் தீங்கு செய்ய வேண்டுமென்னும் நோக்கம் இல்லாமலும் இருக்கலாம்!” என்று அவள் தனக்குட் சொல்லிக்கொண்டாள்.

66

திகழ்கலையோடு சுருக்கமாகவும் விரைவாகவுந் தான் பேசியபொழுது கொள்ளைத் தலைவனான நல்லான் பெயரை அவள் மொழிந்திலள். ஏனென்றால், முதலாவது தன்றோழிப் பெண் சுந்தராம்பாளை அச்சுறுத்துவதற்கு அவள் விரும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/242&oldid=1581515" இலிருந்து மீள்விக்கப்பட்டது