உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் 13

வில்லை; இரண்டாவது நடுத்தெருவுல அவன் பயர் சொல்லப்படுமாயின் அதனை ஒட்டுக் கேட்டவர் நீலகிரி நகரத்துள்ளாரை யெல்லாம் சடுதியில் எழுப்புவித்து, அவனைப் பிடிப்பவர்க்குப் பரிசில் கிடைக்குமாதலால் அதனைத் தேடிப் பிடிக்கும்படி செய்துவிடுவாரென் றெண்ணியும், தான் மீனாம் பாளுக்குக் கூறிய உறுதிமொழிகளை களைந்தும் அதனைச் சொல்லாது விட்டனள்.

சிறிது நேரத்திலெல்லாந் திகழ்கலை ஒரு மதிற் கதவண்டை வந்துநின்று அதிலுள்ள புழை வாயிற் கதவைத் திறந்து, பின்னே குமுதவல்லியும், சுந்தராம்பாளும் வர உள் நுழைந்தாள். உள் வாயிற் படிமேல் காப்பிரிப்பெண் கையில் விளக்கேந்தி நின்றாள்; இந்தப்பெண் தாழ்மையோடுங் குமுதவல்லியை வணங்கி, ஆனால் ஒரு சொற்கூடப் பேசாமல் மேடைப்படிமேல் அழைத்துப் போனாள். தளத்தின்மேற் போய்ச் சேர்ந்தார்கள். குமுதவல்லி நான் வந்திருக்கும் அவ்வீடு பழையமாதிரியாயும் இடமகன்றதாயும் இருக்கக்கண்டாள். ஏனென்றால், இந்தத் தளத்திலிருந்து பலகிளைகளாய்ப் பிரியும் நீண்ட வழியுள்ள வாயில்கள் பல இருந்தன. ஆயினும், சுற்றிலுமுள்ள அவற்றைப் பார்க்கவும் ஆராயவும் அவளுக்கு நீண்ட நேரம் இல்லை; இதற்குள் அக்காப்பிரிமாது உயர்ந்த ஒரு சோடு மடக்குக் கதவுகளில் ஒன்றைத் திறந்தாள்.. அவள் அவ்வாயிலின் உள்ளே புகும் முன்னமே, வெளியே அத்தளத்தின் மேல் விளக்கை வைத்துவிட்டாள். கரியசூரியகாந்தப் பட்டுத்திரை ஒன்று அப்பால் இழுத்து விடப்பட்டது; குமுதவல்லியும் திகழ்கலையும் சுந்தராம்பாளும் உள் நுழைந்த அரையில் விளக்கு வெளிச்சம் மங்கலாய் மினுக்கு மினுக்கென்று வீசியது.

அவ்வறை இடம் அகன்றதாய் தான் இருந்தது: அங்குள்ள தளவாடங்களைப் பார்த்தால் அவை செவ்வையாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அரைவாசி இருளாய் இருந்தது; ஏனெனில், நடுவேயிருந்த மேசைமேல் இரண்டு மெழுகுத்திரிகள் மாத்திரமே எரிந்து கொண்டிருந்தன; சுவர்களின் மேல் கறுப்புத்துணி தொங்க விடப்பட்டிருந்தது. அவ்வறையில் அங்ஙனம் நிறைந்து நின்ற சிறுகிய சவஇருள் அச்சத்தையும் வணக்க வொடுக்கத்தையுந் தோற்றுவிப்பதா யிருந்தது - ஆனால்அஃது அப்போது உதவுகிற நோக்கத்திற்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/243&oldid=1581516" இலிருந்து மீள்விக்கப்பட்டது