உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

215

இசைந்ததா யிருந்தது. அக்கறையில் கடைக்கோடியில் ஒரு கட்டிலிருந்தது, அது நிலமட்டத்திற்கு மேல் இரண்டுபடி உயர்த்தப்பட்டிருந்து ஒரு திண்ணைமேல் இடப்பட்டிருந்தது. கரியசூரியகாந்தப்பட்டாற் சமைத்த ஒரு பெரும் படங்கு அக்கட்டிலின்மேற் கட்டப்பட்டிருந்தது; அதேபட்டாற்செய்த தொங்கல்கள் அக்கட்டிலின் தலைமாட்டைச்சூழ நாற்றப் பட்டிருந்தன. அக்கட்டிலின்மேல் மீனாம்பாளின் உடம்பானது ஒரு வெள்ளைத் துப்பட்டியினாற் சுற்றி நீட்டப்பட்டிருந்தது; அவளது முகம் முக்காடிட்டு மறைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஓர் அரசியையும் தனது சழுமையான வளர்ச்சியினாற் பொறாமை அடையச் செய்யும் அவளது கரிய கொழுங் கூந்தலின் நீண்ட பல மயிர்ச் சுருள்களானவை அம்முக்காட்டின் மடிப்புகளின் கீழே சிதறிக் கிடந்தன.

அவ்வறையிற் பரவியிருந்த அரைவாசி மங்கலிலும், அக்கட்டிற் கால்மாட்டில் நின்ற ஒருவனைக்குமுதவல்லியும் சுந்தராம்பாளும் உடனே தெரிந்து கொண்டார்கள். அவனது கரிய இயற்கையிலே மினுமினுப்பான மயிரின் மேலும், நேர்த்தியாய் வரைந்தாற் போன்ற மீசையின் மேலும். அழகிய முகத்தின் மேலும், மேலும், அவள் அவள் அணிந்திருந்த சட்டையின் பூந்தையல்கள் மேலும், அவனது கத்திக் கைப்பிடியில் அழுத்திய மணிகளின் மேலும் அங்குள்ள அச்சிறிய வெளிச்சம் பட்டு மிளிர்ந்தது. அவன் கைகள் மார்பின் குறுக்கே மறைக்கப் பட்டிருந்தன. அவன் துயரமான பார்வையோடு அக்கட்டிலின் மேற் கிடந்த உருவத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். இவன் இளைய நீலலோசனனே யன்றி வேறல்லன்.

அவனை அவ்விடத்திற் பார்ப்பதைக் குமுதவல்லி எதிர் பாராமல் இருக்கவில்லை; அவனைச் சிறிது பார்த்த அந்த நொடியே அவள் சுந்தராம்பாள் பக்கமாய்த் திருப்பிப் “பேசாதே! அச்சமுற்றுக் கூவாதே! தைரியமாய் இரு! இறந்து போன தன் மனைவியின் படுக்கையண்டையிருந்து கொண்டே அவன் நமக்கு ஒரு தீங்கு செய்யத்துணிவான் அல்லன்!” என குசுகுசுவென்று விரைந்து கூறினாள்.

குமுதவல்லி தன் தோழிப்பெண்ணை நல்ல நேரத்தில் எச்சரித்தது நன்றாயிற்று; ஏனெனில், பயங்கரனான நல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/244&oldid=1581518" இலிருந்து மீள்விக்கப்பட்டது