உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 13

னன்றே நீலலோசனனைத் தானும் பிழைபட எண்ணியிருந்த சுந்தராம்பாள் அவனைப்பார்த்தவுடனே வீரிடும் நிலைமையள் ஆனாள். அத்தோழிப்பெண் தனக்குள்ள மனவலிமையை யெல்லாம் தனக்குத் துணியாக ஒருங்கே வருவித்துக் கொண்டு தன் அன்புள்ள தலைவியின் கிட்ட மிக நெருங்கிநின்றாள். அவ்வறையின் கதவுக்கு மிகவும் எட்டியிருந்த பக்கமாய் அக்கட்டிலண்டை மீனாம்பாளின் தோழிகளில் ஒருத்தியான மலையநாட்டுப் பணிப்பெண் மண்டிக்காலிட்டிருந்தாள்; ஏனென்றால், மேடை நீண்டிருந்த அந்தக் கடைசியில் சுவருக்கு மூன்றடி விலகி அக்கட்டில் நின்றது.

அக்காப்பிரிப்பெண் சிறிது பின்னே வரக் குமுதவல்லி யையும் சுந்தராம்பாளையும் திகழ்கலை இப்போது அக்கட்டி லண்டை மெல்ல அழைத்துச் சென்றாள். இறந்தவர்க்குக் காட்டவேண்டும் வணக்கத்தை எண்ணிக் குமுதவல்லியும் சுந்தராம்பாளும் தமது முக்காட்டைப் பின்புறம் தள்ளினார்கள். தனக்கு முன்னே நீட்டப்பட்டிருந்த உருவத்தினின்றும் நீலலோசனன் தன் விழிகளை உயர எடுத்து அன அறைக்குள் நுழைந்தவர் எவரென்றுபார்க்க இப்போது தான் முதல் முதல் நோக்கினான். அழகிய குமுதவல்லியைஅவன் பார்த்ததும் கலந்து தோன்றிய வியப்பினாலும் களிப்பினாலும் சடுதியில் திடுக் கிட்டாள்; ஆனால், திகழ்கலையோ எச்சரிக்குங் குறிப் போடு உடனே தன்கையை உயரத்தூக்கி - மெதுவாயிருந்தாலும் காதுக்கு நன்றாய்க் கேட்கும்படி அத்தனை தெளிவாயுள்ள குரலில், “ஒரு சொற்கூட! ஓர் எழுத்துக் கூடப்பேச வேண்டாம்! இறந்தவர்ககு எதிரில் நீங்கள் இருக்கிறீர்களென்பதை நினையுங்கள்!” என்று பகர்ந்தாள்.

நீலலோசனன் இங்ஙனம் திடீரென்று நினைவுறுத்தப் பட்டவனாய் மறுபடியும் தன் கண்களைக் கீழ்நோக்கிக் கொண்டான்; என்றாலும் குமுதவல்லி தன் கண்கள் இவன் கண்களின் எதிர்நோக்குதலைக் கருத்தாய் விலக்கிக் கொண்டன ளென்றும், திகழ்கலை தீர்மானமாகவும் அழுத்தமாகவும் சுருக்கமாகவும் அச்சொற்களை மொழிந்தபோது அவளது முகத்தின்மேல் வெளிறின நிறம் ஒன்று பரவிற்றென்றும் கருதிப்பார்க்க அவன் தவறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/245&oldid=1581519" இலிருந்து மீள்விக்கப்பட்டது