உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

217

குமுதவல்லியும் சுந்தராம்பாளும் அக்கட்டிலண்டை சென்ற தமக்குக் கிட்டஇருந்த பக்கத்தில் நின்றார்கள் - நீலலோசனனோ கால் மாட்டண்டையிலேயே இன்னும் நின்று கொண்டிருந்தான். மலைநாட்டுப் பணிப்பெண் எதிர்ப்பக்கத்தில் முழந்தாளிட் டிருந்தாள்.

திகழ்கலை வணக்க ஒடுக்கம்மிக்க மெல்லிய குரலில், “இறந்து போன இப்பெண்ணின் முகத்தைப் பாருங்கள்!” என்று சொல்லிக் கொண்டே மீனாம்பாள் முகத்தின்மேலிருந்து முக்காட்டை மெல்லெனத் தூக்கினாள். “பாருங்கள் இஃது எவ்வளவு அமைதியாயிருக்கின்றது! பெருமாட்டி, தன் முழு அமைதியை உறுதிப்படுத்தும்பொருட்டுத் தாங்கள் இப்போது இங்கேவந்திருப்பதற்குக் காரணமான அவ்வுயிர் நல்மெய்தி யிருப்பதனை அறிவிக்கும் நற்குறியாக இவ்வமைதிக் குறிப்பை யாம் நினைப்பாமாக!”

இங்ஙனம் விளம்பிய பின்னர்த் தான் முதலிற்தூக்கிய படியே மெதுவாக அம்முக்காட்டினைத் திகழ்கலை கீழே றக்கிவிட்டாள்; மீனாம்பாளின் முகமானது மறுபடியும் இவர்களது பார்வையினின்றும் மறைபட்டது ஒரு நிமிஷநேரம் எல்லாரும் வணக்க கொடுக்கத்தோடு வாய்பேசாதிருந்தனர்; அதன்பிறகு குமுதவல்லியின் குரலானது வெள்ளிமணியின் ஒலிபோன்று மெல்லிதாய்த் தெளிவாயிருந்தாலும் நடுக்கமுள்ள தாய்ப் பேசத்துவங்கியது.

"மீனாம்பாள்! நீங்கள் எவ்வகையான தீங்கு எனக்குச் செய்திருந்தாலும் அன்றிச் செய்யக் கருதியிருந்தாலும்-- அத்தீங்கின் அளவும் அதன் தன்மையும் முன்னும் இன்னும்யான் அறியாதிருந்தாலும், அவற்றையெல்லாம் யான் மன்னித்து விட்டதன் உறுதிமொழியை நீங்கள் உயிரோடிருந்தபோதே யான் எடுத்துக் கூறினேன். ஆனால் இப்போதும்,--இவ்விடத்தும், உயிர் அற்ற உங்கள் உடம்பு கிடக்கும் இக்கட்டிலண்டையிலும், இன்னும் புனிதமாகவும் வணக்கவொடுக்கத்தோடும் அம் மன்னிப்பு உறுதி மொழியைத் திருப்பிச் சொல்லுகின்றேன். ஓ மீனாம்பாள்! அழகு படுத்துவதற்கென்றே பிறந்தாலென்ன நீங்கள் தோன்றிய இந்நிலவுகத்தினின்றும் வீழ்ந்து போன வான்மீன் போலத் தோன்றிய சிறிதுகாலம் நீங்கள் மறைந்து சென்றாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/246&oldid=1581520" இலிருந்து மீள்விக்கப்பட்டது