உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் - 13

இறைவன் திருவருளால் உங்கள் உயிர் இன்னும் உயர்ந்த னியதோர் உலகத்திற்கு மேலெடுக்கப்பட்டு, அங்கே என்றும் விளங்கும் முதல்வனது அருளிருக்கையினின்றும் போதரும் அவ்வருளொளியின் நல்ல தூய விளக்கத்தின்கண் நீங்கள் திகழ்ந்திருக்கும்படி அவ்வையன் அருள் வழங்கு வானாக!” என்று அவ்விளைய நங்கை மொழிந்தாள்.

இதனைச் சொல்லியதுங் குமுதவல்லி நின்றுபோனாள்; அவள் இன்னுஞ்சிறிது பேசியிருப்பாள், ஆனால் இப்போது தன்னை மேற்கொண்டு எழுந்த உருக்கத்தினாற் பேசக் கூடாத வளானாள். இப்போது அழுதவள் அவள் மாத்திரம் அல்லள்; னெனில், அரைவாசி அடக்கப்பட்ட தேம்பல் ஒலிகள் அவள் செவியிற் கேட்டன. சுந்தராம்பாளும், மலையநாட்டுப் பணிப்பெண்ணும், அந்தக்காப்பிரிப் பெண்ணும் அழுதனர்; அவ்விடத்திற்றோன்றிய வணக்க ஒடுக்கமும் இரக்கமும் வாய்ந்த இந்நிகழ்ச்சியினால் நீலலோசனன் உள்ளங் கலங்கினான்; திகழ்கலையின் கண்களும் நீரற்று இருக்கவில்லை. கடைசியாக, இன்னும் இந்நிலையிலிருக்கின்ற குமுதவல்லி பக்கமாய்த் திகழ்கலை திரும்பிப் “போதும், பெருமாட்டி! புத்தசமயத்திற் பற்றுடையவளான யானுங் கூட இந்தச் சடங்கானது தன் பயனைத் தராமற் போகாதென்று இப்போது நம்பத் தலைப்படுகின்றேன், மேலுலகத்துள்ள ஒரு தெய்வத்தின் வேண்டுகோள் மொழியை இந்நிலவுலகத்தில் வெளியிட்டுச் சொல்லும் ஓருயிரின் குரலொலி ஒன்று உண்டாயின் அஃது உங்களுடையதேயாகும்!” என்று மெல்லெனச் சொன்னாள்.

இவ்வாறு சொல்லிக் கொண்டே திகழ்கலை குமுத வல்லியின் கையைப் பிடித்து அவளை அப்பாற் கொண்டு போகலானாள். அச்சமயத்தில் நீலலோசனன் முன்னேறி வந்து நாகநாட்டரசியை நோக்கிப் பேசுங் குறிப்புடையனாதலைக் கண்டு திகழ்கலை துடுக்காகச் சைகை செய்து அவன் இருந்த இடத்திலேயே வாய்பேசாதிருக்கும்படி குறிப்பித்தாள். அவன் அவள் சொல்லுக்குச் கீழ்ப்படியாதிருக்கத் துணியவில்லை: ஏ னென்றால் அத்துணை வணக்க வொடுக்கத்தையும் அச்சத் தையும் விளைவிக்கும் இயல்பு வாய்ந்த அந்நிகழ்ச்சியின் அடையே, அதனையெல்லாம் நடத்தும் உரிமையுடையவளாய்க் காணப்பட்ட முன் அறிமுகம் இல்லாத அப்பெண் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/247&oldid=1581521" இலிருந்து மீள்விக்கப்பட்டது