உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லாமலே வாளானாள்.

குமுதவல்லி நாகநாட்டரசி

அச்சமூட்டும் ஓரதிகாரத்தைச்

219

செலுத்து

கொள்ளைக்கார நல்லானென்றே தான் கருதிவிட்ட நீலலோசனன் மேல் குமுதவல்லி ஒரு முறையேனும் தன் பார்வையைச் செலுத்தவேயில்லை. அப்பெருமாட்டி இங்ஙனம் தன்னிடத்து முற்றுங் கணிசக் குறைச்சலாய் நடந்ததைப் பற்றி நீலலோசனன் மிகுந்த வருத்தமும் அதைப் போலவே மிகுந்த வியப்புங் கொள்ளப் பெற்றான்--இத்தகைய நட நடக்கையின்

காரணம் இன்ன ன்னதென்று புலப்படாமையோடு, மலைநாட்டு வியாபாரியின் வீட்டின் கண் தோழமை கொண்டிருந்த தன்னை அவள் சடுதியிற் பிரிந்து போன மருமத்தையும் இது மிகுதிப் படுத்தியது. குமுதவல்லியையும் சுந்தராம்பாளையும் திகழ்கலை அவ்வறைக் கதவண்டை அழைத்துப் போனாள்; அவர்கள் ஒருமுறையேனும் பின்னே திரும்பிப் பார்க்கவில்லை: சூரிய காந்தப் பட்டுத்திரை அப்பால் இழுத்துவிடப்பட்டது--கதவு திறக்கப்பட்டது, அவர்கள்தளத்தின் மேல் வந்து நின்றார்கள்.

66

ப்போது பெருமாட்டி, நீங்கள் தங்கியிருக்கும் விடுதியின் தோட்டவாயிலுக்கு மறுபடியும் உங்களை அழைத்துச் செல்வேன். அவ்விடத்திற்கு நீங்கள் சென்றபின் அல்லாமல், சிறிது நேரமேனும் திகழ்கலைமேல் நீங்கள் அவநம்பிக்கையுற்றதைப் பற்றி உங்களுக்கு உண்டான வருத்தத்தை நீங்கள் அவளுக்குத் தெரிவிக்க வேண்டாம்." என்று திகழ்கலை மொழிந்தனள்.

ன.

என்றாலும் குமுதவல்லி தனது வருத்தத்தை உடனே அவளுக்கு எடுத்துரைத்திருப்பாள்; ஆனால், அவ்வறிவினளோ அந்தக் காப்பிரிப்பெண் தளத்தின் மேல் வைத்து விட்டுப் போன விளக்கைக் கையிலெடுத்துக் கொண்டு, அவளை மெத்தைப் படியின் கீழ் மிகவுஞ் சுருக்கென வழி நடத்திக் கொண்டு சென்றாள். திகழ்கலை, குமுதவல்லி, சுந்தராம்பாள் என்னும் மூவர் முகங்களின் மேலுந் திரும்பவும் முக்காடு இழுத்துவிடப் பட் தலைவாயிலின் உட்புறத்தே விளக்கு வைத்து விடப்பட்டது; பின்னுஞ் சிறிது நேரத்தில் அவர்கள் தெருவிற் சென்ற போது அவர்களுக்குப் பிறகே வாயிற்கதவு மூடிக் கொண்டது. வாய் பேசாமலும் பாதுகாப்போடும் அவர்கள் வழி தொடர்ந்து சென்றார்கள். மனோகரது விடுதியின் தோட்ட வாயிலண்டை வத்ததும் குமுதவல்லி திகழ்கலையை நோக்க, "யான் சிறிது

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/248&oldid=1581522" இலிருந்து மீள்விக்கப்பட்டது