உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் - 13

நேரம்வரையில் உன்னைப் பற்றி நினைக்க வேண்டியதாயிருந்த தீய ஐயுறவின் பொருட்டு என் அகத் துண்டான மிக்க துயரத்தைத் தெரிவிப்பதற்கு இதுதான் சமயமாயிற்று. உனது குத்து வாளைத் திரும்பவும் நீயே எடுத்துக் கொள்.” என்று புகன்றாள்.

திகழ்கலை தனது குத்துவாளைக் குமுதவல்லியின் கையிலிருந்து வாங்குகையில், “பெருமாட்டி, இனியொருகால் திரும்பவும் நாம் எதிர்ப்படுகுவமாயின் இவ்வறிவோளிடத்துத் தாங்கள் நம்பிக்கை உடையவர்களாயிருப்பீர்கள். இப்போது விடைகொடுங்கள்!” என்று கூறினாள்.

"ஒரு மொழி, திகழ்கலை--ஒரு மொழி!” என்று குமுதவல்லி விரைந்துகூவிப் பின்னும், “சில செய்திகளைப் பற்றி நீ நிரம்பவுந் தெரிந்தவளாகக் காணப்படுகின்றாய்: உனக்கு அவற்றை நன்றாய் அறிவிக்கக் கூடியவர்களோடு நீ இருக்கின்றனை. எனக்குச் சொல், நான் உன்னைக் கெஞ்சுகின்றேன் - இறந்துபோன மீனாம்பாள் முன்னொருகால் எனக்குச்செய்ய நினைத்த தீது யாது?” என்று

வினவினாள்.

"பெருமாட்டி, எனக்குத் தெரியாது,” என்று திகழ்கலை விரைந்து விடைகூறிக், கடிதிற்றிரும்பிச் சென்று ஒருநொடியிற் கட்புலனுக்கு எட்டாமற், சூழ்ந்திருந்த இருளில் மறைந்து போனாள்.

66

அன்பிற்கினிய பெருமாட்டி, நாம் பத்திரமாய் வந்து சேர்ந்ததற்காக நம் பெருமானை வழுத்துவமாக!" என்று சுந்தராம்பாள் களிப்புமிக்க குரலிற் கூறினாள்.

66

"ஆம்-நம் இறைவனை நாம் வாழ்த்துவமாக!" என்று நாகநாட்டரசி இசைந்து கூறினாள்.

பின்னர் அவர்கள் மறைவு வாயிலின் வழியே உள் நுழைந்து, தோட்டத்தைக் கடந்து, தத்தம் அறைகட்குச் சென்றார்கள். அங்கே ஞானாம்பாள் அவர்களை வரவேற்கும் பொருட்டு மிகுந்த களிப்பாற் குதித்தோடி வந்தாள்; ஏனெனில், அவர்களது வருகையானது நம்பிக்கையுள்ள அப்பெண் காண்டிருந்த அளவற்ற கவலையையும் திகிலையும் ஐயுறவையும் தீர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/249&oldid=1581523" இலிருந்து மீள்விக்கப்பட்டது