உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

221

மறுநாட்காலையில் உணவருந்தியவுடனே குமுதவல்லி தோட்டத்திலே உலாவுவதற்காகக் கீழ் இறங்கினாள்-- இந்த வேளையில் அவள் பாங்கிமார் அவள் பின்னே வரவில்லை; னென்றால் சிறிது நேரம் அவர்கள் தம் இருக்கையிற் செய்ய வேண்டிய அலுவல்மேல் நின்றார்கள். ஆகவே தனியிருந்த குமுதவல்லியின் உள்ளத்திற் பின்வருமாறு எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்தன. இன்றைக்குத்தான் மனோகரர் திரும்பி வர வேண்டிய நாள். நாகநாட்டின்கணுள்ள தனது மாளிகை யினின்றும் தான் வரவழைக்கப்பட்ட முதன்மையான காரணம் இன்னதென்று தனக்குத் தெரிவிக்கப்படுதற்கு அவள் எதிர் பார்த்திருந்த நாள் இன்று தான். இன்னும் முன்னாள் மாலையில் நேர்ந்த நிகழ்ச்சிகளையும் அவள் நினைத்தாள். அத்தனை இனிமையோடும் உருக்கத்தோடும் தான் எவளுடைய உயிரின் பொருட்டுக் கடவுளைத் தொழுதனளோ அவளை நினைத்து ஒரு பெருமூச் செறிந்தாள்.

இரண்டரை நாழிகை நேரத்திற்கு மேல் குமுதவல்லி அத்தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தாள்; அப்போது தற்செயலாய் அவள் இதற்கு முன் தான் புகுந்திராத ஓர் ஒடுங்கிய சாலையினூடே செல்வாளானாள். அதன் ரு மருங்கும் பழந்தருமரங்கள் அடர்ந்து, அம்மரங்கள் மேற் படர் கொடிகள் சன்னல் பின்னலாய் வளர்ந்து கிடந்தமையால், குமுதவல்லி இப்போது இறங்கியிருக்கும் கட்டிடத்திற்கு எதிர் வரிசையாய் அமைந்த கட்டிடத்தை நோக்கிச் செல்லுங் கொடிப்பந்தர்ப் பாதையாய் அஃது அமைந்திருந்தது.குமுதவல்லி இவ்வெண்ணங் களின் வயப்பட்டவளாய்க் கீழ் நோக்கிய கட்பார்வையுடன் இச்சாலை வழியே சென்றாள். சடுதியிலே ஒரு சாளரத் தட்டிக் கதவு திறக்கப்பட்ட ஓசையும், அதே சமயத்தில் மகிழ்ச்சியும் வியப்புங் கலந்த ஒரு குரலொலியும் அவள் செவிக்கு எட்டின. உடனே அவள் நிமிர்ந்து நோக்கினாள்; அங்குமுதலடுக்கிலுள்ள ஒரு ரு பலகணியண்டையில் இளைய நீலலோசனன் நின்றனன்.

கொள்ளைக்கார நல்லானென்றே தான் பிழைபடக்கருதிய அவ்வாடவனைமனோகரரது மாளிகையின்கண்ணே--தனக்கும்

புகலிடமாய் அமைந்த அவ்வீட்டின்கண்ணே அங்ஙனம் பார்த்தலும் குமுதவல்லி தன்னகத்து நடுக்கத்தால் எழுந்த கூக்குரலொலியை வருத்தத்தோடு தான் அடக்கக் கூடியதாயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/250&oldid=1581524" இலிருந்து மீள்விக்கப்பட்டது