உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் 13

ருந்தது.பெருந்திகிலும் வியப்புமே அவள் வாயைத் திறவாதபடி திடீரெனப் பூட்டி விட்டன! உடனே விரைந்து முக்காட்டை இழுத்திட்டுக் கொண்டு திரும்பி அவ்விடத்தை விட்டுக் கடுகிச் சென்றாள். தன் காதிற்குச் சில சொற்கள் வந்து கிட்டின-அவளது பேரச்சத்திற்குக் காரணமாயிருந்த மனிதனின் வாயிலிருந்து மும்முரமாய்க் கத்திச் சொல்லப்பட்ட சொற்களே அவையாம். ஆயினும்,அச்சொற்களின் பொருள் அல்லது கருத்து அவளுக்குப் பிடிபடவில்லை, அவளது மூளை அத் துணை குழம்பிப் போயிற்று, அவளுணர்வுகள் அத்துணை கலங்கிப் போயின. அவ்வீட்டுக்கார முதியோளை அழைத்துத் தன்னைத் தவிர அதே வீட்டின்கண் இன்னும் வேறு எவர் தங்கியிருக்கின்றா ரென்ப தனைக் கேட்டறியும் மனவுறுதி யோடுஅவள் விரைந்து தன் அறைக்குத் திரும்பினாள்,--ஆனால், தன் உணர்வு தன் நிலைக்கு வந்தவுடனே குமுதவல்லி தான் மீனாம்பாளுக்குச் சொல்லிய உறுதிமொழியைப் பாதுகாக்கவும் விலக்க முடியா நிகழ்ச்சி களால் வெளிவிட நேர்ந்தாலல்லாமல் தான் கொள்ளைக்கார நல்லானென்றே பிழைபட எண்ணிய அவ்வாண்மகனைக்

காட்டிக்கொடுக்கலாகாதெனவுந் தீர்மானித்தாள்.

அவள் மெத்தைப் படிக்கட்டின் மேல் ஏறிச் சென்ற மாத்திரத்தே, குளியலறை வாயிலிற் சுந்தராம்பாளை எதிர்படச், சுந்தராம்பாளும் சொல்லுவாள் “பெருமாட்டி, தங்களைக் காணும் பொருட்டு இவ்வீட்டுக்கார முதியோள் காத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் தலைவரும் பெரிய வியாபாரியு மான மனோகரர் இப்போது தான் திரும்பி வந்திருக்கிறார்....

66

ஆ, அவர் திரும்பி வந்து விட்டனரா?” என்று கூறுகையிற் குமுதவல்லி சொல்லுதற்கரிய ஆறுதல் எய்தப் பெற்றவளாய்த் தான் கொண்ட களிப்புத் தன் கண்களில் ஒளிர “ஈசனே போற்றி!” என்று தன்னுள் மெல்லெனச் சொல்லிக் கொண்டாள்; ஏனெனில், தனக்கு மிகத் தெரிந்தவரும் மாட்சிமை நிறைந்தவருமான மனோகரர் தனக்கு நண்பரும் தன்னைப் பாதுகாப்பவருமாய் இருப்பரென அவள் இப்போது உறுதியாய் நம்பினாள்.

தனக்கு அச்சத்தையும், கலக்கத்தையும் விளைவித்த அக்கடைசியான நிகழ்ச்சியைப் பற்றி அவள் தன் பாங்கிமார்க்கு ஓர் எழுத்துக் கூடச் சொல்லவில்லை; ஏனென்றால், அவள் இயற்கையிலே பெருந்தன்மையான உள்ளமுடையோளாயிருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/251&oldid=1581525" இலிருந்து மீள்விக்கப்பட்டது