உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

223

தலின் தன்னிடத்தே நிறைந்த பற்றுதலும் நன்றியும் வைத்திருக்கும் அவ்விளம் பெண்கள் அச்சுறுதற்குரிய செய்தி களைத் தன்னால் இயன்ற மட்டும் அவள் எப்போதும் விலக்கவே நினைந்தாள். செல்வத்திற் சிறந்த அவ்வியாபாரி முன்னிலையில் தகுந்தபடி செல்லல் வேண்டி விரைவில் அவளுடைகள் சிறிது மாற்றி உடுக்கப்பட்டன. அவள் மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து காண்டவளாய்த், தன்னை அவ்வியாபாரி முன்னிலையில் அழைத்துக் கொண்டு போதற்கென்று அவ்வீட்டுக்கார முதியோள் வந்து காத்துக் கொண்டிருக்கும் இருக்கையறைக்குச் சென்றாள்.

டம் ம் அகன்ற அக்கட்டிடத்தின் நடுவில் அல்லது முதன்மையான இடத்தில் அமைந்த அறைக்குச் செல்லா நின்ற பாதையினூடே குமுதவல்லி அம்முதியோளைப் பின்றோடர்ந்தே கினாள்: அவ்வறைக் கதவை அம்முதியோள் பரக்கத் திறந்து விட்டாள்; குமுதவல்லியும் உள் நுழைந்தாள். அழகிய பொருள்களால் ஒப்பனை செய்யப்பட்டிருந்த அவ்வறையின் கடைக்கோடியில் சார்மணைக் கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்த மாட்சிமை மிக்க முதியோன் ஒருவனை முதன் முதற் கண்டாள்; கொள்ளைக்கார நல்லானென்றுதான் பிழைபடக் கருதிய அவ்வாடவன் முன்னிலையிலும் அங்ஙனமே தான் வந்திருப்பதைக் குமுதவல்லி அதன்பின் அடுத்துக் கண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/252&oldid=1581526" இலிருந்து மீள்விக்கப்பட்டது