உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

225

எழுபதுக்குக் குறைந்ததாய் இராது; தன்னுடைய மார்பின் மேற்றொங்கும் நீண்ட வெள்ளிய தாடிமயிர் உடையவராய் இருந்தார். வட்டவடிவமான கண்ணாடியினால் மாட்டுக் கொம்புச் சட்டத்தில் வைத்துச் செய்யப்பட்ட மூக்குக் கண்ணாடி யானது அவரது வளைந்த மூக்கின் நடுவே தொங்கிற்று; வெண்மையான மெல்லிய துணியைப் பாகையாகத் தலையிற் கட்டியிருந்தார்; முழங்கால் அளவுந் தொங்கும் நீண்ட சட்டையும் பூண்டிருந்தார். உறுப்புக்களின் உதவி கொண்டு மக்கள் மனப்பாங்கை மிகவும் மேற் பார்வையாய்ப் பார்த்துணர் வார்க்கும், இவரது முகத்தின் கண் அமைந்த ஏதோ ஒரு குறிப்பானது அலுவலிற் பழகிய நுண்ணறிவோடு இவரது ஈர நெஞ்சத்தின் இயல்பையும் புலப்படக் காட்டியது: முதலிற் சான்ன இவரது குணத்திற்குரியதான தன்னய விருப்பமானது பிறர் நலங்கருதும் இவரது பெருந்தன்மைக்குமுன் எந்த நேரத்திலும் கீழ் அடங்கிப் போவதேயாம் என்பதை இவர் பார்வைகளிலிருந்து தெரிந்து கொள்வது எளிதாயிருந்தது.

அந்த அறையிற் றளவாடங்கள் நேர்த்தியாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. தட்டிக் கதவுகளுள்ள அதன் சாளரங்களில் துணிமறைப்புகள் தொங்கவிட்டு ஒப்பனை செய்திருந்தது; வண்ணம் பூசிய அதன் மச்சுகளைச் சலவைக் கல்லாற் செய்த தூண்கள் தாங்கி நின்றன; சுவர்களிலே ஓவியங்கள் தொங்க விடப்பட்டிருந்தன; சார்மணைக் கட்டில்கள் சூரியகாந்திப் பட்டினால் தைத்து ஓரங்களிற் பொற்சரிகை யினாலும் இடையிற் பொன்னுருக்களாலும் புனையப்பட்டிருந் தன. சிறிய மேசையின் மேலும், நிலத்தின் மேலும், பலதிறப்பட்ட உணாப் பொருள்கள் நிறைந்த பளுவான வெள்ளிக்கலன்கள் இருந்தன, பெரும்பனிக்

டிகளையிட்டுக் குளிரச் செய்த இனிப்பான பழங்களை ஒருவகைச் சாந்தினால் வனையப்பட்ட ஒரு பெருங்கலத்திலே நிரப்பி அதனை ஒரு தவிசின் மேல் வைத்திருந்தார்கள்; அம் மாளிகையைச் சூழ இருந்த வெளி நறுமணங் கமழ்ந்ததோடு, செயற்கை குழாய் ஊற்றுகளிலிருந்து குமிழிக்கும் பளிங்கொத்த தண்ணீரினாற் கடுங்குளிர்ச்சியும் ஓர் அளவான இனிய நிலையுடையதாகச் செய்யப்பட்டிருந்தது.

டியே

நீலலோசனன் நாம் முதன் முதற் காட்டியபடி டையணிந்திருந்தனன்: ஆனாற் குமுதவல்லியோ தான் குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/254&oldid=1581528" இலிருந்து மீள்விக்கப்பட்டது