உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 13

மேற் சவாரி வந்தக்கால் அணிந்திருந்த செழுமையான ஆடையை விட ன்னும் மிகுதியான அழகோடு உடுத்திருந்தனள். நேர்த்தியான பொற்பூவிடைந்த கச்சினை அவள் முழங்கை வரையில் அணிந்திருந்தமையால், பால்போலும் வெண்மை யுடையதாய் அழகாக அமைக்கப்பட்ட அவளது முன் கையானது முழங்கைவரையிலும், அல்லது அதற்குச் சிறிது மேலுங் கட்புலனாயிற்று. அவளது ஆடையின் ஓரமெல்லாம் பட்டுப் பின்னல் உடையதாய்ப் பல திறப்பட்ட நிறங்கள் வாய்ந்ததாய்க் கச்சோடு கூட முழுதும் பூத்தொழில் உள்ளதாய் வயங்கிற்று. பொற்பட்டுக் கொட்டையுடைய நொய்ய ஆடை அவளது விளங்கிற்று, அவள் சொல்லுதற்கரிய அழகோடுந் தோன்றினாள்; அவள் அங்கே எதிர்ப்பட்ட இளைய நீலலோசனனும் ஆண்டன்மைக்கேற்றபடி அங்ஙனமே வனப் புடன் திகழ்ந்தான்.

தலைக்கணியாய்

நீலலோசனன் முதலில் அவ்வறைக்குட் புகுந்தமையால், மாட்சிமை வாய்ந்த அவ்வியாபாரி அவ்விளம் பௌத்தனுடைய விழைவுதரும் முகத்தையும் அழகிய வடிவத்தையும் போதுமான அளவு ஏற்கெனவே பார்த்துக் கொண்டார். ஆதலால், அம்முதியோன் பார்வை முழுதும் இப்போது குமுதவல்லிமேற் பதிந்திருந்தன; ஒருவகை அன்பான உன்னிப்போடும் வியப் போடும் இறும்பூதோடும் அவர் அவளை முற்றும் நோக்கினார், இவ்வாறாக அவரது பார்வை அவள் மேல் நின்றமையால், நீலலோசனன் அவ்வழகிய வெண்மணியை முன் அறிந்த அறிமுகத்தோடும், களிப்பும் மகிழ்ச்சியும் கலந்த தோற்றத்தோடு அங்ஙனமே அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததனை அவர் காணாராயினர்.

சில

அவள் முதலில் அவ்வறைக்குள் வந்தபோது அவளை வரவேற்றற் பொருட்டுச் சுருக்கமாகச் சொல்லிய சொற்களுக்குப் பின் சிறிது நேரம் வரையில் மனோகரர் ஏதொரு சொல்லுங் குமுதவல்லியை நோக்கிக் கூறாமல் இருந்தார். அவர் அவள் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தது. அவளுடைய அழகு அத்தனை கவர்ச்சி மிக்கதாய் இருந்தன் பொருட்டாக மாத்திரமன்று, அவள் இயல்பினையும் தெரிதற் பொருட்டாக வேயாம். ஏனென்றால் தன் மேற்பரப்பின்மேற் பிரதிபலனமாம் எதனையும் கண்டுணர வல்லார்க்குத் தான் உள்ளத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/255&oldid=1581529" இலிருந்து மீள்விக்கப்பட்டது