உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ

228

மறைமலையம் -13

வல்லி தமது வலது கைப்புறத்தும் உள்ள இருக்கையில் அமர்தலைக்கண்டு அன்போடும் முறுவலித்து, “உங்கள் ஒவ்வொருவர்க்கும் ஏற்ற நிலைமைக்குத்தகயான் உங்களை முன்னிலைப்படுத்திப் பேசியபோது உங்கள் முகங்களின்மேல் வியப்புக்குறி தோன்றியதை யான் கண்டு கொண்டேன். ஆனாலும், இதற்குமுன் என்றும் நீங்கள் ஒருவரையொருவர் கண்டு பழகியதில்லாமையால், இப்போது உங்களை ஒருவரோடு ஒருவர் பழக்கப் படுத்தி வைக்கின்றேன். அதனோடுகூடக், கட்டாயமாய் இல்லாவிட்டாலுங் காரிய முறைக்காவது ஒரு வினையைச் செய்துமுடிக்கக் கடவேன். எனக்கு நம்பகமுள்ள ஏவலாளான சந்திரன் வாயிலாக யான்அனுப்பிய திருமுகமும் இலச்சினையும் பெற்றுக் கொண்ட நாகநாட்டரசி குமுதவல்லி உண்மையிற்றாங்களேயன்றி வேறு பிற அல்லர் என்பதனை யான் உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவ்வடை யாளத்தை எனக்குக்காட்டும்படி பெருமாட்டி, முதலிற்றங் களைக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.” என்றார்.

முன்னே பலதரமும் நம்மாற் குறிப்பிடப்பட்ட அம்மந்திர மோதிரத்தைக் குமுதவல்லி தன் விரல்களினிறுங் கழற்றி யெடுத்து, அதனை மாட்சிமிக்க மனோகரிடங் கொடுத்தாள்.

“இதோ என்னுடையது!” என்று நீலலோசனன் கூறிக் கொண்டே கத்தி மாட்டும் தனது அரைப்பட்டிகையை அவிழ்த் தான்; தன்னை மெய்ப்பிக்கும் தனது அடையாளத்தை எடுத்துக் காட்டும் அவசரத்தில் மணிகள் அழுத்தின தனது சுத்தியையும் கீழே மெதுவான கம்பளிமேல் விழும்படி விட்டுவிட்டான்; பிறகு தனதுருப்பாயத்தின் மார்பண்டையுள்ள ஒரு பையிலிருந்து அதனை யெடுத்தான்; பாட்டையிலே தான் வந்தபோது தனது பணப்பையிலுள்ளவை தற்செயலாய்க்கீழே விழுந்ததிலிருந்து, அதனிடத்துப் பெரிதுங் கருத்துள்ளவனா யிருந்தான்.

L

இவ்வாறு அவன் மனோகரிடம் கொடுத்த நம் ஒரு மோதிரமேதான் - குமுதவல்லி இப்போது கொடுத்தனையோ முழுதும் ஒத்திருந்தது இம்மோதிரம்- ஒரு கன்னஞ் செதுக்கப் பட்ட ஒரேயொரு செம்மணி குயிற்றிப் புதுமையான வேலைப் பாடு வாய்ந்ததாயிருந்தது இம்மோதிரம். இதனையும் மனோகரர் எடுத்துத் தொழிலாளிக்குரிய உன்னிப்போடும் அதனைச் சிறிதுநேரம் ஆராய்ந்து பார்த்தார். தனது மோதிரத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/257&oldid=1581532" இலிருந்து மீள்விக்கப்பட்டது