உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

229

முற்றும் இணையான அக்கணையாழியை காண்டலும் குமுத வல்லிக் குண்டான குழப்பத்தையும் வியப்பையும் இதனைப் படிப்பவரே எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம்! இதன் கருத்து யாதாய் இருக்கக் கூடும்? அவ்விளம் பௌத்தனைப்பற்றித் தான் ஏதோ முழுதும் பிழைபாடான எண்ணங் கொண்டு வருந்து கின்றனவா? தான் கொண்ட ஐயங்களால் அவனுக்குப் பிழை செய்தனளா? சூழ நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சான்றாய் நின்று புதுமையாய்கூடி இவ்வினைவினைத் தோற்றுவித்தனவா? எது நினைப்பதென்று அவளுக்குப் புலனாகவில்லை - உண்மையிலே அவள் நினைவுகளெல்லாம் கடிதிற் கலக்கமடைவனவாயின.

“நல்லது உங்களிருவரையும் இங்கே வருவித்தற் பொருட்டுத் தனித்தனியே விடுத்த முடங்கலோடு அனுப்பிய மோதிரங்களே இவை. இந்தப் பெருமாட்டி” என்று மனோகரர் குமுதவல்லியைச் சுட்டினவாய் அவ்விளம் பௌத்தனை நோக்கி, “நாகநாட்டரசி யாவர்.” என்று கூறிப் பின்னர் அவ்விளைஞனைச் சுட்டினவாய்க் குமுதவல்லியை நோக்கி, “இந்தப் பெருமான் மேற்கரைநாட்டு மன்னற்குச் சுவிகாரப் புதல்வனான நீலலோசனன் ஆவர்." என மொழிந்தார்.

“அன்பும் ஈசமும் வாய்ந்தமனோகரரே, யான் அரசனான நீலலோசனனை இதுதான் முதன்முறையாக எதிர்ப்பட்டேன் அல்லேன்; யான் அவருக்குச் செய்த சில பிழைகளுக்காக என் நெஞ்சார்ந்த மன்னிப்பு மொழிகளை, என் மிகவும் உண்மையான பிழைபொறுக்கு முரைகளைக் கூறுதற்கு ஒரு நொடிப்பொழுதுந் தாழேன்.” என்று உருக்கத்தால் நடுங்கிய குரலோடும் குமுதவல்லி கூறினாள்.

மனோகரர் அவ்விளைஞர் இருவரையும் வியப்புடன் நோக்கி, “நீங்கள் இருவீரும் இதற்குமுன் எதிர்ப்பட்டீர்களா? இவ்வறையில் நீங்கள் ஒருவரையொருவர் தெரிந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணினேன்.” என்று கூவிச்சொன்னார்.

“என்றாலும் நாங்கள் முன்னமே எதிர்ப்பட்டிருக்கின் றோம்,” என்று கூறுகையில் நாகநாட்டரசி நாணத்தால் தன்முகஞ் சிவப்பேறப் பெற்றவளாய், “ஆம், மாட்சிமைதங்கிய நீலலோசனன் மன்னற்கு யான் தீது செய்தவளானேன்; அதுவும் மிகப்பொல்லாத ஐயுறவினாலேதான். என்னுடைய கதையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/258&oldid=1581533" இலிருந்து மீள்விக்கப்பட்டது