உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

230

மறைமலையம் 13

விரைவிற் சொல்லிவிடுகின்றேன். அருமையிற் சிறந்த மனோகரரே, யான் இடையிற்றங்கிய சத்திரத்தின்கண் என்னுடையமோதிரத்தை இப்போது தங்களிடம் யான் கொடுத்த இவ்விலை உயர்ந்த மந்திரமோதிரத்தைக் களவு கொடுத்து விட்டேன்; அடுத்த நாளில் இவ்விளம் பெருமானைத் தலைப்பட்டு இவரொடு தோழமை கொண்டேன். வழிக்கரை யிலுள்ள ஐயக்காரர் சிலர்க்குக் காசுதந்து உதவுகையில் இவர் தற்செயலாய்த் தமது பணப்பையிலிருந்தவற்றைக் கீழே வீழ்த்திவிட்டார்; வீழ்ந்தவற்றில் ஒரு மோதிரம் இருந்தது; அஃது என்னுடையதுதான் என்று நம்பிவிட்டேன். ஆனால் அந்த மறை பொருளின் வரலாறு இப்போது வேறுவகையாய்ப் புலப்படலாயிற்று; அந்த நேரத்திலோ யான் ஒரே எண்ணந்தான் கொள்ளக்கூடியமாய் இருந்தது இதனால், கூடியமாட்டுங் காலந்தாழாமல் மாட்சிமை தங்கிய இவ்வரசிளைஞரை யான் பிரிந்து செல்லவேண்டுவது இயல்பாயிற்று. பிறகு ஒருவர்க்கு நேர்ந்த கழிவிரக்கத்தால் என்னுடைய மோதிரத்தைத் திரும்பப் பெறலானேன் என்றாலும், அந்நிகழ்ச்சியிலுங்கூட யான் மாட்சிமை தங்கிய நீலலோசன மன்னரைப்பற்றிப் பொல்லாங் காகவே பின்னும் நினைக்கலானேன்.” என்று தொடர்ந்து ரைத்தாள்.

66

-

"ஓ! புத்தன் வாழ்க!” என்று அவ்விளம் பௌத்தன் ஓலமிட்டவனாய்," என் அறிவை கலக்கி என் அறிவை கலக்கி என்னை மிகத் துன்புறுத்தி வந்த அந்த மறைபொருளானது கடைசியில் நன்கு புலனாயிற்று! இனி மன்னிப்புக் கேட்டலைப் பற்றியோ வென்றால், அழகிய அரசி, தங்கள் ஆம்பற் செவ்வாயினின்று பிறக்கும் ஒரு சொல்லே, மாட்சிமை மிக்க தாங்கள் என்னைப் பிழைபட நினைந்ததனால் உண்டான எனது மனத்துயரத்தை எனதுளத்திலிருந்து சுவடறத்துடைத்தற்குப் போதுமானதாகும். என்று கூறினான்.

குமுதவல்லி தனது முகத்தை அழகாகச் சாய்ந்து இச்சொற்களை ஏற்றுக்கொண்டாள்; அப்போது நாணத்தால் உண்ட ான சிவப்பு அவள் கன்னங்களில் மறுபடியும் பரவிற்று; இவ்விளம் பௌத்தனும் கொள்ளைக்கார நல்லானும் ஒருவரே என்று இவள் பிறகுஒரு சிறிதும் நினையாவிட்டாலும் நீலலோச னனைப் பற்றிய மற்றொருவராய் இவளைத் திகைப்பித்தது, அஃது, அவன் முன்னாள் மனக்கலக்கத்தில் குமுதவல்லி தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/259&oldid=1581534" இலிருந்து மீள்விக்கப்பட்டது