உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

6

231

மன்னிப்பை மீனாம்பாளுக்கு உறுதிப்படுத்திக் கூறின கட்டிலண்டையிற் காணப்பட்டதேயாம். அவ்விடத்திலே நானெதிர்ப்பட்டதைச் சுட்டி இப்போது அவன் சிறிதுந் குறிப்பிடத்தக்கது பற்றியும் அவள் திகைப்புற்றாள்: ஏதோ ஒரு காரணம் பற்றி அதனை மனோகரர் முன்னிலையில் அவன் தெரிவியாமல் மறைத்துடைக்கும்படி கற்பிக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்று நினைந்தவளாய் அவள் தனக்குள் இணக்கிக் கொண்டாள்.

66

அங்ஙனம் நீங்கள் எதிர்பட்டீர்களா?” என்று அம்முதி யோள் அவ்விருவர் இடையிலும் இருந்தபடியே அவ்வழகிய இளைஞனையும் எழில்மிக்க அந்நங்கையையும் இடைவிடாத ஆவலுடன் நோக்கிப் பின்னும், நீங்கள் அவ்வாறு எதிர்ப் பட்டதைப்பற்றி நான் கருதப்படவில்லை. அவர் தாங்கள் கூறிய அப்பொருந்தா நிகழ்ச்சி நேராவிடின், இவ்விளம் பெருமானைப் பற்றித் தவறாமல் நாங்கள் நல்லெண்ணங் கொள்ளுதலைத் தடைசெய்யத்தக்கது எதுவுந் நேர்ந்திராது: நீல்லோசன, தாங்களும், அரசி குமுதவல்லியொடு கொண்ட வழியிடை நட்புச் சடுதியிற் குலைந்துபோனபோது நிரம்பவும் வருத்தப்பட்டீர் களென்பதனைத் தங்கள் பார்வையினாலேயே நன்கு தெளியப் பெற்றேன்.” என்று உரைத்தார்.

-

நீலலோசனனது முகம் வெட்கத்தால் வெட்கத்தால் அனன்றது; என்றாலும் அதில் மகிழ்ச்சியும் கலந்து தோன்றியது; ஆனால், குமுதவல்லியினிடத்துத்தோன்றிய நாணமோ இன்னும் பெரிதாயிற்று - அங்ஙனமே அவள் முகத்திற் கனன்ற நாணச் சிவப்பினிடையே அருவருப்பிற்கு அடையாளமான ஒரு பார்வையுங் கலந்துதோன்றியது. அவள் நினைப்பாளானால் அங்ஙனம் நினைப்பது இயல்புதான் அம்முதியோன் பேசியதில், கொச்சைத்தனம் என்று கொள்ளத்தக்க, ஒரு பொருந்தாச் சிறு தன்மை இருந்தது. பெருந்தன்மை மிக்க பார்வையும் அத்தனை வயதும் உடைய அவர், தனது கண்ணிடை நாணத்திற்கு மதிப்புக் குறைச்சலான சொற்களை எண்ணாமற் சொல்லிய குற்றத்திற்கு ஆளானதைக் குறித்து அவள் வியப்பும் வருத்தமும் கொள்ளலானாள்.

-

ஆனால், அப்பெரியோர் புன்சிரிப்புற்றுப் பிழைபடாத அன்போடு, அவள் கொண்ட அருவருப்பைத் தடையின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/260&oldid=1581535" இலிருந்து மீள்விக்கப்பட்டது