உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV

நூலுரை

அடிகளார் இயற்றிய புனைகதை நூல்களுள் ஒன்று இந்நூல். அடிகளார் இயற்கைத் தோய்வும், உவமைச் செறிவும் கதைத் திருப்பங்களும் ஒன்றை ஒன்று வென்று நிற்கின்றன. ஏறத்தாழ 300 பக்கங்களையுடைய இந்நூல் 1911 இல் கழக வெளியீடாக வந்துளது.

| ந

ஆங்கிலக் கதை முறை வழி நூலைப் படைத்திருந்தாலும் நூலின் அமைப்பு முழுவதும் தனித் தமிழ்நாட்டு அமைப்பேயாம் என்று பதிப்புரை பகர்கிறது. இதனைக் கற்பார் தனித்தமிழ் மாண்பும் பைந்தமிழ்ப் புலமையும், பண்டைய வழக்கும், அறிவும், ஆற்றலும், நன்மை வேட்டலும், பிறர்க்குதவலும், ஆட்சித் திறனும், சூழ்ச்சி வன்மையும், புதிய கதையமைக்கும் பொற்பும் பெறுவார் என்பதும் பதிப்புரை.

வழி நடந்து போகும் இளைஞன் எனத் தொடங்கி (முதல் அதிகாரம்) குமுதவல்லியும் நீலலோசனனும் என நிறைவு செய்கிறார் (பதினாறாம் அதிகாரம்).

ஒவ்வோர் இடத்து வண்ணனையும், ஆள்வண்ணனையும் பக்கம் பக்கமாக நீள்கின்றன.

ஒவ்வோர்

கி.பி. 625 ஆம் ஆண்டு இளவேனில் காலத்தில் என வரலாற்றுப்புதினப் போக்கில் மேல் மலைத் தொடர் வழியில் நீலமலைச் செலவாய் நேர்கின்றது. செல்லும் இளைஞன் சந்திரன் என்பான். அவன் நெடுந்தொலைவில் இருந்து வந்து ஓர் இடுக்கு வழியில் சென்று கள்வர் பாசறை ஒன்றை அடைகிறான். கள்வர் தலைவனையும் காண்கிறான்.

எல்லாம் செவ்வையாக நிகழ்ந்தன என இளைஞன், கள்வர் தலைவனிடம் கூற அவன், “இதனால் நாகநாட்டு அரசியிடத்தும் நீலலோசனன் என்னும் பௌத்த இளைஞனிடத்தும் கருதிய வண்ணம் முடித்து வந்தாய் என்று நினைக்கிறேன்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/26&oldid=1581280" இலிருந்து மீள்விக்கப்பட்டது