உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

மறைமலையம் 13

மேற்கரை என்னும் தன் நகரில் இருந்து பயணம் போவதற்கு மிகவும் இசைந்த வழியினை நீலலோசனனுக்குக் காட்டியது போலவே, நாகநாட்டில் இருந்து வரும் அழகிய குமுதவல்லிக்கும் காட்டியிருக்கிறேன் என்று அவ்விளைஞன் கூறினான்.

கள்வர் தலைவன் பெயர் நல்லான்; வந்த இளைஞன் நீலகிரியான். கள்வர் தலைவன் ஆறு கள்வர்களை அழைத்து நீலலோசனன் வரும் வழியை நோக்கியிருக்க விடுத்தான். நீலலோசனனோடு துணைவர் இருவர் வருவதும் சொல்லி விடுத்திருந்தான். அவர்களைச் சிறையாகப் பிடித்து வர வேண்டும் என்பது அவன் ஆணை.

குதிரையில் முன்னே வந்தவன் நீல லோசனன்; குடகு நாட்டான்; மற்றை இருவரும் வியாக்கிர வீரன், கேசரி வீரன்

என்பார்.

சிறை பிடிக்கும் முயற்சி தோற்றுப்போய் மூவர் பிணமாக, மூவர் தப்பி ஓடினர். நீலலோசனன் முதல் மூவரும் வழியைத் தாடர்ந்தனர். ஓரிடத்தில் வழி மூன்றாகப் பிரிந்தது. அடுத்திருந்த குடிசையில் கேட்க அவன் நீலகிரி செல்லும் வழியைக் காட்டினான். அப்படிக் காட்டியவன் கள்வன் இருளனே, அக்குடிசை வாணன் உடையை வாங்கி உடுத்துக் காட்டினனாம்.

அவ்வழி குறுகி நெடிது சென்று ஒரு பரந்த வெளியை அடைந்து நின்றுவிட்டது. ஒரு குடிசை இருந்தது. பளிங்குபோல் நீரோடை இருந்தது. அதன்பால் பளிங்கன்ன நங்கை ஒருத்தி நின்றாள். நீல லோசனன் அவள் அழகில் மயங்கினான். நீலகிரி செல்லும் வழி தனக்குத் தெரியும் என்றும் தானும் அங்கே செல்ல இருப்பதாகவும் கூறினாள். அவள் தோழியர் இருவரும் உடனிருந்தனர். அவள் பெயர் மீனாம்பாள் என்றாள். அவள் தங்கும் இடம் தெளிநீர் வேலி என்றாள். நீலலோசனனும் மீனாம்பாளும் முன்னே செல்ல மற்றை இருவர், இருவரும் பின்னே சென்றனர். முன்னே ஒரு கோபுரம் வந்தது. அங்கே தங்கினர். நீலலோசனன் மீனாம்பாளுடன் தனியறையில் தங்கினான். மற்றையோர் நால்வரும் ஒருங்கே ஓரறையில் தங்கினர். மீனாம்பாள் மயக்க வலையில் நீலலோசனன் வீழ்ந்து நெடுநேரம் உறங்கிக் கேசரி வீரனால், எழுப்பப்பட்டு மயக்கு நீங்கினான். நல்லான் சூழ்ச்சியால் சிறை வைக்கப்பட இருந்த நீலலோசனன் கேசரி வீரன் திறத்தால் விழிப்புற்று நல்லான் படை வருமுன் தப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/27&oldid=1581281" இலிருந்து மீள்விக்கப்பட்டது