உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் - 1 - 1 ❖

xxvii

வெளியேறினர். அவ்வாறே நாகநாட்டரசி குமுத வல்லியும் வரக் கூறிய வழியை மாற்றிக் கொண்டதால் சிறைப்படுத்த முடியவில்லை. கள்வர் தலைவன் நல்லான் எல்லாம் தோல்வி என வருந்தி வேறு சூழ்ச்சியில் இறங்கினான்.

நல்லான் மாதவன் என்னும் ஏவலன் உடையை மாற்றிக் காண்டு குமுதவல்லி சென்ற வழி நோக்கி விரைந்து சென்றான். ஒரு தங்கல் விடுதியில் நின்ற குதிரைகளைக் கண்டு மாதவன் கூறிய அடையாளம் தெளிந்து, நல்லானும் ஓர் அறையில் தங்கி, குமுதவல்லி தங்கியிருக்கும் அறையைக் கண்டு கொண்டு அயர்ந்த போதில் அவ்வறைக்குச் சென்றான். அதனைக் குமுதவல்லி அறிந்தும் அயர்ந்தாள் போலக் காட்டியிருக்க அவள் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி விட்டு வெளியேறினான். வேறு அணிமணிகளை எடுத்திலன். விழித்துக் கூறினால், அவன் கத்தி பதம் பார்க்கும் என்பதால் குமுதவல்லி அமைந்திருந்தாளாம். தோழியரிடம் மோதிரம் இழந்தாலும் நாம் நீலமலை சென்று எவரிடம் அதனைச் சேர்க்க வேண்டி வந்தோமோ, அவரைக் கண்டு உண்மையைச் சொல்வோம் என மேலும் பாதுகாப்புடன் புறப்பட்டனர்.

தங்கல் விடுதியார் தக்க வீரர்களோடு போகச் சொல்லி ஆள்களுடன் விடுத்தார். அவர்கள் செல்லும் வழியளவும் சன்று மீள மூவர் மட்டும் தொடர்ந்தனர். காட்டுக் குறுவழியூடே புலியொன்று வந்து இரண்டு வீரர்களை வீழ்த்தியது. அம்மூவரும் நீலலோசனன் முதலாய மூவர் எனப் பட்டனர். நீலலோசனன் குமுத வல்லியின் பரிவைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உதவுவதாகக் கூறிச் சொல்லி உடன் சென்றான். செல்லும் வழியில் முதியர் இருவர் தளர்ந்து கையேந்த அவர்களுக்குக் காசு தந்தாள் குமுதவல்லி. உடன்வந்த நீலலோசனனும் தன் காசு தர முயல, பையில் இருந்து காசுடன் குமுதவல்லி மோதிரமும் வீழக்கண்டாள். அதனை வெளிக்காட்டாதவளாய்த் தங்கல் விடுதி ஒன்றை அடைந்தாள். அங்கே குமுதவல்லியும் தோழியரும் தங்குவதற்கு ஓரிடம் தீர்மானமாயிற்று. நீலலோசனன் முதலோர் வேறிடத்துத் தங்கிக் காலையில் புறப்படத் தீர்மானித்தனர்.

ன்

குமுதவல்லி தங்கும் அறைக்குப் போகும் போதே தோழியரை விரைந்தழைத்துக் குதிரை மேல் ஏறச் சொல்லி விரைவுற்றாள். விரைந்து போன போக்கில் சென்று, தட்டுப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/28&oldid=1581282" இலிருந்து மீள்விக்கப்பட்டது