உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

  • மறைமலையம் 13

மீளவும்

குடிசையில் தங்கினர். அன்றிரவு அங்கே தங்கி புறப்பட்டனர். நல்லான் மீனாம்பாளைக் கண்டு தான் குமுதவல்லியிடம் மோதிரம் பற்றிய வெற்றியை உரைத்து, நீலலோசனைச் சிறைப்படுத்தத் தவறியதை அறிந்து வருந்தி உரையாடி மீள் முயற்சி மேற் கொண்டான். மீனாம்பாளை நீலகிரிக்குச் சந்திரனிடம் செல்ல ஏவி, தான் நீலலோசனனைப் பற்றப் புறப்பட்டான். தப்பிச் சென்ற குமுதவல்லி செல்லும் வழியில் மீனாம்பாளைக் கண்ட ாள். இருவரும் இனிது உரையாடினர். மீனாம்பாள் நீலகிரிக்குத் துணைவருவது போல் காட்டித் தக்க இடத்துச் சிறைவைக்கக் கரவாக எண்ணினாள்.

அவள் தங்கி நெகிழ்வாக உரையாடிக் கொண்டிருக்கும் போது கரும்பாம்பொன்று மறைந்துவந்து மீனாம்பாள் காலைச் சுற்றித் தீண்டியது. ஆங்குப் புதிது வந்த ஒருத்தியும் உடன்வந்த தோழி ஒருத்தியும் நச்சுநீக்கும் மருத்துவம் பார்த்தும் நச்சின் வேலை குறையவில்லை, ஏறியது, மீனாம்பாள் பிழையோம் என்ற நிலையில் தன் வயம் இருந்த மோதிரத்தைத் தந்து நல்லான் மனைவி தானென்றும், நல்லானுக்கு எக்கேடும் செய்யக் கூடாது என்று வேண்டியும், ஆயினும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று கூறியும் உயிர் நீத்தாள்.

6

குமுதவல்லியும் தோழியரும் நீலகிரி சேர்ந்து, தாங்கள் தங்குதற்குத் திட்டப்படுத்திய மனோகரர் வளமனை எய்தினர். அவர் வெளியூர் சென்றிருந்தார் எனினும் வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்திருந்தார் என்பது கேட்டு அங்கே தங்கினர். மனோகரர் மீண்டபோது குமுதவல்லி, அவர் இல்லிலே இருந்து நீலலோசனன் வரக்கண்டாள். மனோகரர் நாகநாட்டரசி யிடத்தும், நீலலோசனனிடத்தும் ஒவ்வொரு மோதிரம் வழங்கி யிருந்ததையும் அவற்றைப் பெற்று அவர்கள் குமுதவல்லியும் நீலலோசனனுமே என உறுதிப்படுத்திக் கொண்டார்.

66

“என் இளைய நேசர்களே நீங்கள் இருவீரும் நாகநாட்டை ஒருகால் அரசாண்ட கோச் செங்கண்ணன் பேரப் பிள்ளைகள் ஆவீர்கள் என்பது உண்மையேயாம்" என்று கூறினார். இருவர் கைகளையும் இணைத்து மணவடையாளம் புரிந்தார். பழைய வரலாற்றைக் கூறி நிறைவு செய்கிறார்.

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/29&oldid=1581283" இலிருந்து மீள்விக்கப்பட்டது