உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

233

வாயினின்று பிறக்கும் ஒவ்வொன்றும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவளாய்த் தனது வெண்மை யான அழகிய கையை நீலலோசனன் கையில் வைத்தாள்.

66

உடனே, மனோகரர் தமது இருக்கையினின்றும் எழுந்து, அவ்விளைஞர் இருவரின் சென்னிமேற் றம்கைகளை நீட்டிக், ‘கடவுள் உங்களிருவர்க்கும் அருள் வழங்குவாராக! மற்றொ ருவர் பொருட்டாக யான் உங்களுக்கு விரைவில் கொடுப்பதாய் இருக்கும் புதுமையான பொருட்களுக்கு நீங்கள் தகுதியுை தகுதியுடையவர் களாகும்படி நாம் வழிபடும் முதற்பெருந் கடவுள் அருள் புரிவாராக! ஓ, நீலலோசன, சைவ சமயத்தின் அருளொளியானது நுமதுள்ளத்தின் ஊடுருவிச் சென்று விளங்குவதாக?" என்று வாழ்த்துரை கூறினார்.

இச்சொற்களைச் சொல்லிய வகையிலும் ஓசையிலும் வெளித்தோற்றமும் வணக்கவொடுக்கமும் வாய்ந்தது. ஏதோ இருந்தமையால், அப்பௌத்த ளைஞனும் அச்சைவ நங்கையும்அவர் காலடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள்; அவருடைய கைகளை எடுத்து முத்தம் வைத்தார்கள். ஆனால், அவ்விருவரும் ஒன்றுமே பேசவில்லை; அவர்கள் தம்மிடத் துண்டான மிகுந்த மனவுருக்கத்தால் பேசக்கூடாதவராய் இருந்தனர். ஆகவே சமயம் மாறுதலைப்பற்றி அம்முதியோன் சொல்லிய சொற்கள் எவ்வகையான எண்ணத்தை நீலலோசன னிடத்தில் எழுப்பினவென்பதை அங்ஙனங்கோரிய அம்முதி யோனே அஃது அங்ஙனமிருக்கலாமென்று திட்டமாய்த் துணிந்தறியக் கூடவில்லை.

-

"என் அன்பிற்கினிய இளைய நேசர்களே, எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! உங்கள் இருக்கைகளில் இருங்கள் யான் சொல்லப்போகிற விளக்கங்களை உற்றுக்கேளுங்கள்.” என்று மனோகரர் கூறினார்.

அங்ஙனமே குமுதவல்லியும் நீலலோசனனும் எழுந்து, வணக்கத்தக்க அவ்வியாபாரியின் வலது பக்கத்திலும் இ டது பக்கத்திலும் முறையே உட்கார்ந்தனர். இவ்விருவரும் அவர்தம் முகத்தை மிகுந்த ஐயுறவோடும் உற்றுப்பார்த்தனர்; ஏனென் றால், முதன்மையான செய்திகளைத் தாம் இப்போது அறியப் போகுந்தறுவாயில் இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/262&oldid=1581538" இலிருந்து மீள்விக்கப்பட்டது