உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

234

மறைமலையம் 13

மனோகரர் அவ்வரசி பக்கமாய்த்திரும்பி, “மாட்சிமை நிறைந்த தங்களை நோக்கி மாத்திரம் யான் கூறுவதாயிருந்தால், தங்கள் பாட்டனார் கோச்செங்கண் மன்னரைப் பற்றித் தாங்கள் முன்னமே அறிந்து வைத்திருக்கும் பலசிறுவரலாறு களை யான் கூறாது விட்டுச் செல்லலாம். ஆனால், பெருமான் நீலலோசன, தாங்கள் அவ்வரலாறுகளைச் சிறிதும் உணர்தற்கு டமில்லா திருத்தலினால், யான் அவற்றின் நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவேண்டுவது அகத்தியமாய் இருக்கின்றது. கோச் செங்கண் மன்னர் நாகநாட்டைத் தனியான ஆட்சி புரிந்தவ ரென்று தாங்கள் அறிதல் வேண்டும்; அவர் தமது நுண்ணறிவு முறையாலும், தாம் பிறழாது நடாத்திய செங்கோன்மையாலும், தாமாகவே ஆங்காங்கு நாட்டிய அறச் சாலைகளாலும் தம் குடிமக்களாற் பெரிதும் அன்பு பாராட்டிப்போற்றப்பட்டு வந்தார். நாகப்பூரிலுள்ள தமது அரண்மனையில் அவர் வழக்க மாய்த் தங்கியிருந்தனர் - அழகிற் சிறந்த குமுதவல்லி, தாங்கள் அவ்வரண்மனையிலிருந்து தான் சிறிது காலத்திற்கு முன் பயணம் புறப்பட்டு நீலகிரி நகரத்திற்கு வந்து சேர்ந்தீர்கள். நீங்கள் இருவரும் பிறப்பதற்குமுன் - அதாவது இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன் இருக்கலாம்- வணங்கத்தக்க முனிவரர் ஒருவர் ஒருநாள் அவ்வரண்மனை வாயிலில் வந்து நின்று, தாம் கோச்செங்கண் மன்னனோடு பேச விரும்புவதாகத் தெரிவித்தனர். தன்னைக் காண வருபவர்களெல்லார்க்கும் எப்போதும் எளியராயிருக்கும் அம்மன்னர் அத்துறவியை எவ்வளவு விருப்பத்தோடு வரவேற்பாரென்பதை நாம் சொல்லல்வேண்டா; மேலும் உங்கள் பாட்டனார் சைவ சமய உண்மையில் மிகவும் மனம் அழுந்தி நின்றார்; தமது செல்வாக்குப் பரவிய இடங்களிலெல்லாம் அவர் அதனைத் தம்மாற் கூடிய மட்டும் வளர்த்து வந்தார். அம்முனிவரர் அவர் முன்னிலையிற் சென்று, தாமிருவரும் தனித்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். அம்மன்னரும் அதற்கிசைந்து தம்பரி வாரங்களை அப்புறப்படுத்திவிட்டார்; அவன் பின் அத்தூய முனிவரர் அவ்வரசர்செவியிற் படும்படி மிகவும் புதுமையான செய்திகளைக் கூறத்துவங்கினார். பின்வருகிறபடி அவ்வரசரை நோக்கிச் சில பல கூறுவாரானார்: என் அரசே,புதுமைமிக்க ஒரு மறைவான செய்திக்கு வைப்பிடமாய் உள்ளவர் இந் நேரத்தில் இவ்வுலகில் இரண்டு பெயரே இருக்கின்றனர். சில கிழமை

துயரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/263&oldid=1581539" இலிருந்து மீள்விக்கப்பட்டது