உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ

குமுதவல்லி நாகநாட்டரசி

235

களுக்கு முன் அதனை யறிந்தவர் மூன்று பெயர் இருந்தனர்; ஆனால், ஒருவர் இறந்து போயினர்--இப்போது இம்மறை வினைத் தம் நெஞ்சத்தே பூட்டி வைத்திருப்பவர் இருவரே யிருக்கின்றனர். தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கத் தின் தூய கட்டுப்பாட்டின்படி, இப்போது அம் மறைபொருள் மூன்றாம் ஒருவர்க்கு அறிவிக்கப்பட வேண்டுவதாய் இருக்கின்றது; னனில், அம் மறைபொருள் முற்றுமே தெரியாமல் அழிந்து போதற்கு இடம் இல்லாதபடி இயன்ற மட்டும் அதனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக அதனைத் தெரிந்த வர்கள் எப்போதுமே மூன்று பெயர் இருக்க வேண்டுமென்பது அகத்தியமாகக் கருதப்பட்டது. யான் இப்போது குறிப்பிட்டுச் சொன்ன தொன்று தொட்ட வழக்கும், அம் மறைபொருளின் இயற்கையும் போற்றத்தக்க அம்மறை வினைப் புதிய ஒருவர்க்கு அறிவிக்க வேண்டுவது அகத்தியமாம் பொழுது அதற்கு மிகவுந்தக்கவர் ஒருவரையே தெரிந்தெடுத்தல் வேண்டுமெனக் கற்பிக்கின்றன. அங்ஙனந் தக்கவராயுள்ளவர் இவ்வளவு வயசுடையவராயிருக்க வேண்டு மென்னும் வரை யறையில்லை: ஆனாற் சமயக் கொள்கையைப் பற்றியோ வென்றால் அப்படி யில்லை--ஏனென்றால், சைய சமயத்தைத் தழுவினோ ரல்லாமற் பிறர் இப்பெரிய புதைபொருளை அறியும் மகிழ்ச்சியைப் பெறலாகாது. மாட்சிமை தங்கிய தங்கட்கு இப்போது தான் யான் தெரிவித்த வண்ணம், இம்மறைவினை அறிந்தவரில் ஒருவர் இதனினுஞ் சிறந்த மறுமை யுலகத்திற்குச் சில நாளுக்கு முன் ஏகிவிட்டமையால், அவரிருந்த இடத்திற்கு நிரம்பத் தகுதியான மற்றொருவரைத் தெரிந்தெடுக்குங் கடமை என்னைப் பொறுப்ப தாயிற்று. அறிவாலும் நீதியாலும் அரசர் எல்லாரினுஞ் சிறந்தவரும், அன்பொழுக்கத் தாற் சைவ சமயத்தார் எல்லாரினும் மேற்பட்டவருமான கோச்செங்கண் மன்னரைத் தவிர வேறு சிறந்தவரை யான் எங்ஙனந் தெரிந் தெடுக்கவல்லேன்? என்று இவ்வாறு மேற்கணவாய் மலை நடுவிலிருந்து வந்த அத்தூய முனிவரர் உங்கள் பாட்டனார்க்குச் சொல்லினார்.

போற்றத்தக்க மனோகரர் துவங்கிய கதையை மிகவும் மனங்கவிந்து கேட்டுக் கொண்டு வந்த அரசி குமுதவல்லியும் அரசிளைஞன் நீலலோசனனும் பின்னும் அதன் றொடர்ச்சி யாய் அவர் சொல்லப் போவதனைக் கேட்க எவ்வளவு ஆவல் கொண்டார் என்பதை அவர்களின் பார்வைகளே புலப் படுத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/264&oldid=1581540" இலிருந்து மீள்விக்கப்பட்டது