உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

❖ - 13❖ மறைமலையம் – 13

வணங்கத்தக்க அவ்வியாபாரி பின்னும் பின்னும் அதனைத் தாடர்ந்துரைப்பாரானார்: “மிகவும் போற்றத்தக்கதென்றுஞ்

சிறந்ததென்றும் சொல்லப்பட்ட மறைபொருளை வைத்திருப் பவர்களில் ஒருவராகத் தம்மை தெரிந்தெடுத்ததனால் தமக்கு நயம்புரிந்த அத்தூய முனிவரருக்கு நுங்கள் பாட்டனாரான அக்கோச்செங்கண் மன்னர் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்; பின்வருமாறு அம்முனிவரர் அம்மாட்சியை நிறைந்த மன்னர்க்கு உரைப்பாரானார்:-- எம்பெருமானே, இது காலகாலமாக உண்மையோடுங் கொடுக்கப்பட்டு வருகிற ஒரு புதைபொருளாகும்; மிகவுந் தாழ்ந்த நிலைமையிலுள்ள துறவி களினிடத்தும், மிகவும் வலிய நிலைமையிலுள்ள அரசர் களிடத்தும் இம்மறைபொருள் வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. தனைத் தெரிந்து கொள்வ தானது உலகத்தில் நிரம்பவும் வியக்கப்படுகின்ற பயன்களைத் தாம் அனுபவிக்கத் தக்கவர்கள் என்று எண்ணுகின்றவர்களுக்கு ஒரு திறவுகோலா யிருக்கும். தனதறிவுக்குள் அகப்படும்படி இங்ஙனங்கொண்டு வரப்பட்ட வியப்பான பொருள்களை மிகு களிப்போடும் பேரின்ப வியப்போடும் உற்றுக் கேட்டுக் கொண்டு வந்த கோச்செங்கண் மன்னர்க்கு அம்முனிவர் அம்மறை பொருளை அதன் பின் வளக்கி வெளியிட்டார். அந்த மறைபொருள் யாதாயிருந்தது--அல்லது யாதாயிருக்கின்றது--என்பதை, என் அன்புள்ள அளைளய நண்பர்களே, இப்போது யான் சொல்லுங் காரணங்களால், உங்களுக்கு இவ்வமயத்தில் சொல்லக் கூடாதவனாயிருக் கின்றேன். ஆனாலும், அழகிற் சிறந்த குமுதவல்லி தங்களுக்கு மாத்திரம் அது சுருக்கில் தெரிவிக்கப் படலாம்; நீலலோசனரே, தங்களுக்கு யான் அதே வகையான நம்பிக்கையை எப்போது காட்டப் பெறுவேனோ வென்றால் அது தங்களைத்தான்

பொறுத்திருக்கின்றது.”

ளய

மறுபடியும் மனோகரர் சிறிதுநேரம் பேசாமலிருந்தார்; அப்பெரிய மறைபொருளைத் தானும் அங்ஙனமே தெரிந்து கொள்ளத் தகுதியுடையவனாய்க் கருதப்படுவதெல்லாம், தான் பௌத்தசமயக் கொள்கையை அறவே விட்டொழிப்பதனையே பொறுத்திருக்க வேண்டுமென்பது தான் இது வரையிற் கேட்டு வந்தவற்றால் இனிது விளங்குகின்றதென நீலலோசனன் தனக்குள் நினைப்பானானான். இதைப் பற்றி அவன் மன நிலை எவ்வாறிந்ததென்பது பின்வருவனவற்றாற் புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/265&oldid=1581541" இலிருந்து மீள்விக்கப்பட்டது