உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

237

மனோகரர் பின்னுந் தொடர்ந்துரைப்பாரானார்: “யான் இப்போது குறிப்பிட்ட மறைபொருளைச் சிறிதும் வழுவாமல் முற்றுந் தெரிந்து கொள்ளும் பொருட்டுக் கோச்செங்கண் மன்னர் அத்துறவியோடுங் கூடப் பயணம் புறப்பட வேண்டுவது இன்றியமையாததாயிற்று. அப்பயணஞ் சென்று திரும்பு வதற்குச் சில நாட்கள் மேற் செல்லாது; ஆகவே, தாம் நாக நாட்டின் தலை நகரை விட்டு வெளியே சென்றிருப்பது தம்மைச் சூழ்ந்திருக்கும் நன்றியறிவுள்ள ஏவற்காரர் சிலர்க் கன்றிப் பிறர்க்குந் தெரியா திருக்கும் வண்ணம் அவ்வரசர் பெருந்தகை அதனை மறை வாகவே முடிக்கக் கூடியவரானார். என்றாலும், அவர் அத்தூய துறவியைத் தவிரப் பிறரெ வரையும் உடன் கூட்டிச் செல்ல வில்லை; அம்முனிவரர் எடுத்துச் சொன்ன உறுதி மொழியின் திறத்தில் அவர் ஏமாற்றம் அடையவில்லை. அவ்வியத்தகு மறைபொருட்களஞ்சியமாயும், அதனையறிந்த அறிவால் தாம் அனுபவிக்கக் கிடைத்த நிலையான பயன்களில் சிலவற்றைப் பெற்றவராயும் அவர் நாகப்பூருக்குத் திரும்பி வந்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அப்புனிதமுனிவரர் நம்பிக்கை வாய்ந்த ரு தூதுவனைக் கோச்செங்கண் மன்னர் பால் அனுப்பித் தாம் இறக்குந் தறுவாயில் இருப்பதாகத் தெரிவித்தார். அவ்வரசர் பெருந்தகையும் அந்நல்லோர் தமது யிரை இறைவன்றிருவடிக்குச் செலுத்துந்தறுவாயில் இருந்த இடத்திற்கு ஒரு நொடிப் பொழுதுந்தாழாமற் சென்றார்; அவ்வரசரும் பிரிந்து போகும் அம்முனிவரரின் வாழ்த்துரைகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் அவரை அடக்கஞ் செய்ய வேண்டும் சடங்குகளை முடித்தார். அதன் பிறகு, அம்மறை பொருளை வைத்திருக்கத்தக்க மற்றொருவரைத் தேடிப்பிடிக்க வேண்டுவது அம்மன்னர் பெருந்தகையின் மேலதாயிற்று; தாம் செவ்வையாய் அறிந்த சைவசமய அன்பர்களை யெல்லாம் தமதுள்ளத்தில் அளவிட்டுப் பார்த்த பின்னர், அவர் முடிவாக என்னையே தெரிந்தெடுக்க லானார். ஆம் என்னிளைய நேசர்களே., தங்கள் சிறந்த பாட்ட னாரின் நெருங்கிய நட்பைப் பெற்று இன்புறும் செல்வத்தி னையும் பெருமையினையும் எய்தினேன். எனதுண்மைச் சிவபக்திக்கு அடையாளமாக யான் அப்போது காட்டிய ஒப்பனைகள் இப்போதெடுத்துச் சொல்வது எனக்குத்தகாது: ஆகையால், இறந்து போன அம்முனிவரருடைய நிலைமையை யான் அடையலானேன் என்று சொல்வது போதும். இங்ஙனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/266&oldid=1581542" இலிருந்து மீள்விக்கப்பட்டது