உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் -13

அவ்வுயர்ந்த மறை பொருளை தெரிதற்கு அருள் பெற்ற மூவரில் யானும் ஒருவனானேன்’

பின்னுஞ் சிறிது நேரம் பேசாமலிருந்த பிறகு மனோகரர் மறுபடியும் பின்வருமாறு பேசப்புகுந்தார்-

"கோச்செங்கண் மன்னர்க்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களிருவரும் மணஞ்செய்யப்பட்டவர்களே, அவர்க்கு விருப்பமிருந்தால் தம்புதல்வர்களில் ஒருவர்க்காயினும் தம்மருமக்களில் ஒருவர்க்காயினும் அம்மறைபொருளை அவர்தெரிவித்திருக்கலாம்; ஏனெனில், நான் முன்னமே தெரிவித்தபடி வயதைப்பற்றிய வரையறையில்லை - ஆண் பெண் என்னும் பால் வரையறையும் இல்லை யென்பதனை நீங்கள் முன்னமே தெரிந்திருக்கிறீர்கள். அவர்தம் புதல்வர்கள் கட மை யில் வழுகாமல் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்தாலும், அப்புதல்வர்களின் இளைய மனைவிமார் நற்குணமுடையராயும் மனத்துக்கினியராயும் இருந்தாலும், அவர்களெல்லாரு ம்

உலகப்பற்று

மனை

மிக்கவராயும் தமது உயர்ந்த நிலையின் ஆரவாரத்திலும் வெளிப்பகட்டிலும் அரசியலிலும் நினைவு அழுந்தினவராயும் இருந்தமையால், அவர் தமது மனமார அவர்களுள் எவரையும்தெரிந்தெடுத்து அப்பேரின்ப அனுபவத் திற்கு உரியராம்படி செய்ய இயலாதவரானார். அதுவல்லா மலும், அத்தகையதொரு மறைபொருளைத் தன் யாளுக்குத் தெரியாமல் கணவன் தானே வைத்திருப்பது ஒவ்வாத தான்றாம்-- இனிக்கணவனை விலக்கி அவன் மனைவிக்கு ஒருமறை பொருளைப் புலப்படுத்துவதும் நன்முறைக்கும் நல்லறிவுக்கும் பின்னும் இசையாததொன்றாம். ஆக எல்லா வற்றையும் எண்ணிப்பார்க்கையில் கோச்செங்கண் மன்னர் என்னையே தெரிந்தெடுக்கலானார். ஆனால், இப்போது யான் இக்கதையின் மற்றொரு பகுதியைப்பற்றிப் பேசப் போகின்றேன். கோச்செங்கண் மன்னர்க்கு மணஞ்செய்யப்பட்ட புதல்வர் இருவர் இருந்தனரென்று யான் முன்னமே சொல்லி யிருக் கின்றேன். நீலலோசன, அம்மன்னரின் இளைய புதல்வர்க்கும் அவர்தம் அழகிய மனைவியார்க்கும் தாங்கள் இருபத் தோராண்டுகளுக்குமுன் பிள்ளையாய்ப் பிறந்தீர்கள்!”

“என் பெற்றோர்கள்?" என்று நீலலோசனன் வியந்து வினவித் திரும்பவும் வருத்தம் மிக்க ஐயுறவினால் மனங்கலங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/267&oldid=1581543" இலிருந்து மீள்விக்கப்பட்டது