உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் 13

கோச்செங்கண் மன்னரும் தம்முடைய படைகளையெல்லாம் ஒருங்கு திரட்டினார்; அவரே தம் படைகளுக்குத் தலைவராய் நின்று, தம்மருமகனும் இளைய புதல்வருந் தம்மோடு கூட வரப் பகையரசனுடன் போர் புரியச் சென்றார். ஐயோ! அஞ்சாத பேராண்மையிருந்தாலும், அது பெருந் தொகையான படை மறவர்க்குமுன் யாது செய்யும்! கோச்செங்கண்ணார் படை யானதுதோல்வியடைந்து நாக நாட்டின் தலைநகரான நாகப் பூரினுள் அலங்கோலமாய்ப் பின்னிடைந்து ஓடிற்று. அந்நகரத்தி லிருந்த குடிமக்களோ தம்மரசனிடத்தில் மிகுந்த அன்புடையராய் இருந்தமையால், முற்றுகை செய்யும் பகைவரை எதிர்த்து நிற்றற்கு வேண்டும் ஏற்பாடுகளை மிக்க ஊக்கத்தோடும் செய்தார்கள். அரிட மன்னன் படைத்தலைவனோ கோட்டை மதிற்புறத்தே வந்து சேர்ந்து அந்நகரத்தாரை அழைத்துக் கோட்டையைத் தமக்கு ஒப்படைத்துவிடும்படி சொன்னான். நகரத்தாரோ அதனைக் கடுமையாக மறுத்துக்கூறினார்கள். முற்றுகை செய்தவர்களை மூன்று திங்கள்வரையில் அந்நகரத்தார் எதிர்த்து நின்றார்கள்; ஆனால், அது முற்றிலுஞ் சூழப்பட்டுச் சுற்றியுள்ள நாடுகளுடன் போக்குவரவுக்கு இடமில்லாதபடி வழியடை பட்டமையினாலே, அது பஞ்சத்தின் கொடுமைகளாற் பற்றப்படு மென்னும் அச்சம் உண்டாயிற்று. பகைவர்படையின் தலைவன் ஓர் அறிவிப்பு விட்டு, அவ்வறிப்பிற்கண்ட மூன்று நாட்களுள் நாகப்பூர்க்கோட்டையை ஒப்படையாவிட்டால் இங்ஙனம் பிடிவாதமாய் எதிர்த்து நின்றதற்குக் காரணம் அரசனும் அவன் புதல்வர் இருவருமே என்று கருதப்படுவார் களெனவும், அதனால் அதனைப் பிடித்தபிறகு அம்மூவரையும் கோட்டைக் காத்தளங்களின் மேல் இரக்கமின்றிக் கழுவேற்றுவேன் எனவும் தெரிவித்தான். சண்டையைப்பற்றிப் பேசித்தெளியும் பொருட்டு ஓர் அவை கூட்டப்பட்டது; தமது தலைநகர் எதிரியின் கைப்படுவது திண்ணமென்றுணர்ந்த அம்முதிய அரசர் தாம் கோட்டையைப் பகையரசனுக்கு ஒப்படைத்துவிடுங் கருத்துடைய ராதலை அவ்வகையில் தெரிவித்தார். ஆனால், அவர் மருமகனும் புதல்வரும் அதிகாரிகளும் எதிர்த்தே நிற்கும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்; ஏனென்றால், சாளுவமன்னன் படை நாகநாட்டரசர்க்கு உதவியாய் வருவதாக ஓர் உறுதிமொழி இருந்தது. குடிமக்களோ அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு, தங்கள் முதிய அரசர்க்கு அங்ஙனம் சொல்லப்பட்ட யோச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/269&oldid=1581545" இலிருந்து மீள்விக்கப்பட்டது