உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

241

னையைக் கிளர்ச்சி மிக்க சொற்களால் தாங்கிப் பேசினார்கள். அவரும் குடிமக்கள் கருத்துக்கு இணங்க வேண்டுவதாயிற்று; னென்றால், பகைப்படைத்தலைவன் மிரட்டுதலுக்குந் தான் உடன்பட்டால் தன்னுயிர்க்கும் தன் மக்களுயிர்க்குமே தாம் கவலைப்படுவதாக நினைக்கக்கூடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, நாகப்பூர் பின்னும் நீண்ட நாள் பாதுகாக்கப் படுவதாயிற்று; கோட்டைக்குள்ளிருந்தபடை சடுதியிற் பாய்ந்து தாக்கினமையால், அரிடமன்னன் படையில் ஒருபகுதி முற்றிலும் முறியடிக்கப்பட்டது; அப்படைத் தலைவனோ அதனாற் பெருஞ் சீற்றம் அடைந்தான்; ஆதலால்,பீரங்கிவெடிவைத்து அடித்துக் கொண்டே போய்த் தன்படை வீரரெல்லாரும் தாக்கல் வேண்டுமென்று கட்டளையிட்டான். கோட்டையைக்காத்த படைமக்கள் உயிருக்குத் துணிந்து சண்டை செய்தார்கள்; என்றாலும், அளவுக்கு மிஞ்சின தொகையாயுள்ள பகைவர் படைகளின் முன்னே எத்தகைய ஆண்மையும் போதுமானது அன்று. சுருங்கச்சொல்லுங்கால், நாகப்பூர் பிடிபட்டுவிட்டது; அரசகுடும்பத்தாரைச் சிறைப் படுத்தும் பொருட்டுப் பகைவர் அரண்மனையிற் சென்று மொய்த்துக் கொண்டார்கள். அரசகுடும்பத்தார் தப்பிப் போதற்கான திட்டங்கள் சூழ்ந்து செய்யப்பட்டன! ஆயினும், உங்கள் தந்தையாரும், நீலலோச னரே, நீங்களும் அப்போது அவர்கையில் நீங்கள் ஒரு சிறு மகவாய் இருந்தீர்கள் நாகப்பூர் கோட்டையைத் தாண்டித் தப்பிப்போகலானீர்கள். முதிய அரசரும் அவர்தம் மூத்தமகளும், அம்மகளின் கணவரும் பலமுகமாய்த் தப்பியோடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டார்கள்.நல்வினையற்ற குடிமக்களோ தெருக்கள் நெடுக நின்று கொண்டு, வெற்றிச் செருக்கோடுங் குதிரைமேற் சென்ற பகைவர் படைத்தலைவனைத் தாழ்மையோடும் வணங்கி, அவ்வரச குடும்பத்தாரை விட்டு விடும்படி இரந்து கேட்டார்கள். முதலில் அப்படைத்தலைவன் மனம் இரங்க வில்லை: ஆனால், கடைசியாகச் சிறிதளவு மனம் இரங்கினான்.கோச்செங்கண் மன்னர் உடனே நாகப்பூரைவிட்டுப் போய்விடுதல் வேண்டு மென்றும், அவர் இந்த உலகவாழ்வை முற்றுந்துறந்து செல்வதாகப் புனிதமும் வணக்கவொடுக்கமும் மிகுந்த சூள் உரைக்கவேண்டுமென்றும், மறுபடியும் அவர் நாகநாட்டு மக்களிடை வருதலும், நாகநாட்டு அலுவல்களில் தலையிடுதலும் ஆகாவென்றும், சுருங்கச்சொல்லுமிடத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/270&oldid=1581547" இலிருந்து மீள்விக்கப்பட்டது