உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம்

13

இனி அவர் உயிர்துறந்தவர் போலாக வேண்டுமே யல்லாமல், நேராகவேனும் பிறர்வாயிலாகவேனும் வேறெவ்வழியாலும் எப்போதும் அவர் தம்குடும்பத்தவரோடு மறுபடியும் சிறிதுந் தொடர்புவைத்தல் கூடாதென்றும் கூறி அப்பொருத்தனைக்கு இசைவதாயிருந்தால் அவரை உயிரோடு விட்டுவிடுவதாகப் புகன்றான். ஆண்மைமிக்க அம்முதிய அரசர் மானக்கேடான அப்பொருத்தனைகளை எரிச்சலுடன் இகழ்ந்து, அதனால் நாம் கழுவேறவுந் துணிந்திருப்பார்; ஆனால், தம் மூத்தமகள் மருமகன் உயிரும் கூட அதனால் இடைஞ்சலுக்கு உள்ளாவதை எண்ணினார். ஆகவே, அப்பொருத்தனைக்கு இசைந்து வெளிப்புறப்பட்டார்.அந்தப் படைத்தலைவன் அவர்தம் இளைய மகனை நீலலோசனரே உங்கள் தந்தையைப், பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகத் தெரிவித்தான்; ஆனால், நாட்கழிந்ததேயல்லாமல், உங்கள் தந்தையாரைப்பற்றி ஏதும் செய்திவரவில்லை. நாகப்பூரைப் பிடித்துக் கொண்டு, நாக நாட்டார்க்குள்ள பற்றுதலைத் தொலைத்துவிடலாமென்று அப்பகைவர் எண்ணினார்கள்; ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எங்கேபார்த்தாலும் கலகம் தலைகாட்டுவ தாயிற்று -- கடைசியாக அந்தக் காட்டிலுள்ளவர்களைத் தணிவுசெய்யும் பொருட்டு அப்பகைவர் தம் அரசாட்சியில் ஓர் ஒழுங்கு செய்வாராயினர். நாகநாட்டில் உள்ள மேலோரை யெல்லாம் அழைத்து ஒருசபை கூட்டப் பட்டது; இனிமேல் அந்தநாடு தனக்குரிய ஓர் அரசனாலேயே ஆளப்படுதல் வேண்டுமென்றும், முதன்மையான இரண்டு மூன்று நகரங்கள் மாத்திரம் அவர்கள் உறுதிப்மொழிப்படி அரிடமன்னற் குரியவர்கள் செய்யும் வாணிகத்தைக்காக்கும் பொருட்டு அம்மன்னவன் படைமறவராற் காவல்செய்யப்படுதல் வேண்டுமென்றும் அதில் தீர்மானஞ்செய்தார்கள். இதற்கேற்ப ஓர் உ ன்படிக்கையும் செய்யப்பட்டது; கோச் செங்கண் மன்னரின் மருமகனார் எழில் மிக்க குமுதவல்லி தங்கள் தந்தையார் தம் மனைவியரோடும் இதுவரையில் நாகப்பூரி லேயே ஒருவாறு மேன்மையாகவே சிறைபிடித்து வைக்கப் பட்டிருந்தவர் அரசாட்சிக்கு உரியவராக்கப்பட்டார். அந் நிகழ்ச்சிக்கு இரண்டாண்டுகள் பிற்பட்டு -- அதாவது பதினேழு ஆண்டுகளுக்குமுன்னே, குமுதவல்லி, நீங்கள் பிறந்தீர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/271&oldid=1581549" இலிருந்து மீள்விக்கப்பட்டது