உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

243

இன்னும், நீலலோசனர் தெரிந்து கொள்ளும் பொருட்டுத், தங்கள் பெற்றோர் இருவரும் ஏறக்குறைய ஒரே வகையான நோயால் இரண்டு ஆண்டுகளின்முன் இறந்து போயின ரென்றும், அப்போது நாகநாட்டுக்குடிமக்களும் அரிட மன்னன் அரசியற்றலைவரும் தங்களையே அந்நாகநாட்டுக்குத் தனி அரசியாக ஏற்று அமைக்கலானார்களென்றும் கூட்டிச் சொல்லுகின்றேன்.

66

இனி, என் தந்தையரின் முடிவு எப்படியாயிற்று?” என்று நீலலோசனன் தன்னைத் தோற்றுவித்த தந்தையின் முடிவை யறிய, நிறைந்தபின் யிளமை ஆத்திரத்தோடும் வினாயினான்.

66

L

அவர் நாகப்பூரினின்றும் மறைந்து சென்ற நீண்ட காலத்திற்குப்பின், அவரும் அவர்தம் மகவும் மேற்கணவாய் மலைகளினிடையே செத்துக்கிடக்கக் காணப்பட்டார்களென்று எப்படியோ ஒரு பேச்சு ஊரெங்கும் பரவலாயிற்று; ஆகவே, அவர்கள் அப்படித்தான் அழிந்துபோனார்களென்ற நம்பிக்கை எங்கும் உண்டாயிற்று. ஆனால், உண்மை அங்ஙனமன்று என்பதை, இப்போது நீங்கள் விரைவிற்றெரிந்துகொள்வீர்கள். ஆயினும், முதன்முதல் யான் முதியோரான கோச்செங்கண் மன்னரைப்பற்றிப் பேசல்வேண்டும். அப்பகைத்தலைவனிடம் தாம் செய்து கொண்ட பொருத்தனையின் முறைப்படி அவர் நாகப்பூரைவிட்டுப் புறப்பட்டதும், மேற் கணவாய் மலைத் தொடரின் கண் உள்ள காடுகளில் உள்ளுருவிச் சென்றார்; அப் புனிதமாதவன் தமக்குத் தெரிவித்திருந்த அம்மறைபொருளை இப்போதவர் தமக்குப் பயன்படுத்திக் கொள்வாரானார்; அம்மறைப்பொருளைத் தாம் தெரியலானது பற்றி அவர் திருவருளுக்கு வாழ்த்துரை மொழிந்தார். ஏனென்றால்; இப்பெரிய மண்ணுலகின் குழப்பங்கள் நேராததும், போரிடும் இரைச்சல் நுழையாததும், சூறாவளியானது வானுலகத்தில் தோன்றாததுபோலத் தன்னய விருப்பங்கள் முட்டாததும் ஆன ஓர் இடத்தில் பத்திரமாகவும் இனிதாகவும் ஒதுங்கியிருத்தற்கு ஏற்ற வழியை அவருக்கு அது தந்தது.” என்ற மனோகரர் மறு மொழி புகன்றார்.

இங்கே மனோகரர் சிறிதுநேரம் சும்மா இருந்தார்: குமுதவல்லி தன் உள்ளத்திற் பல்வேறுவகைப்பட்டுத் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/272&oldid=1581550" இலிருந்து மீள்விக்கப்பட்டது