உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

247

மகனாக உரிமைப்

ஒப்பனையாக, அவர் தமது பாதுகாப்பிற் குழவிப்பருவத்தே விடப்பட்ட ஓரிளைஞனைத் தமக்கு படுத்திக்கொண்டதனை எடுத்து மொழிந்தாள். அவ்வறிவோள் மேலுஞ் சொல்லிய சில செய்திகளால் யான் ஓர் ஐயுறவு கொள்ளுதற்கு இடம் பெற்றேன்; ஆனாலும், அதனைக் கோச்செங்கண் மன்னர்க்குக் கூறிற்றிலேன்; ஏனெனில், ஒருகால் அதனை நம்பி அவர் பின்னே ஏமாற்றம் அடைந்தால் என்செய்வதென்று அஞ்சினேன். அப்பெண்மகள் செய்த பரிகாரத்திற்கு நன்றி செலுத்துதல் வேண்டும். அரசர் நோயினினின்றுந் தேறி எழுந்தார். அதன்பின் எனக்குச் சிறிது ஒழிவுநேரங் கிடைத்தவுடன், அம்மேற்கரைமன்னர்க்கு ஒரு திருமுகம் எழுதி அதனை ஒருவேவுகாரன்கையிற் கொடுத் தனுப்பித்தாம் உரிமைபடுத்திக்கொண்ட மகனைப்பற்றி அவர் அறிந்தவையெல்லாம் எனக்குத் தெரிவிக்கும்படி மன்றாடிக் கேட்டேன் அதனோடு, எம்மிருவர்க்குள்ளும் நடக்கும் இச்செய்தி பிறர் அறியாவாறு தம்முள்ளே மறைத்து வைக்க வேண்டுமென்றுங் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். யான் வேண்டிக்கேட்ட அவ்வரலாறுகளை எனக்குத் தெரியப் படுத்துவதில் அவ்வரசர் சிறிதுங்காலந்தாழ்க்கவில்லை; யான் முன்னமே கொண்டிருந்த ஐயுறவை அவை முற்றும் உறுதிப்படுத்தின. ஒருநாள் சாக்கியநர்மர் வேட்டம் ஆடவெளிச் சென்றார் இது நாகப்பூர்கோட்டை பிடிப்பட்ட சிலவாரங் களுக்குப் பின் நிகழ்ந்தது -- அப்போது அவர், வறுமையால் வாடிப்போனாலும் அழகிய தோற்றம் வாய்ந்த ஓர் இளைஞன் தன்கையில் ஓர் இளங்குழவியை வைத்துக்கொண்டு ஓர் யாற்றங் கரையில் அமர்ந்திருக்கக்கண்டார். நீங்கள்தாம் அக்குழந்தை நீலலோசனரே! அவ்வறிய ஆடவனே உங்கள் தந்தை!” என்று மனோகரர் தொடர்பாகச் சொல்லிவந்தார்.

66

இவையெல்லாம் எனக்குப்புதியனவேயாகும்!”என்று நீலலோசனன் வியந்துரைக்கையில், அவன்கன்னங்களிற் கண்ணீர் பெருகிவடிந்தது. “ஐயோ! என் எளிய தந்தையே!”

மிகுந்த மனவுருக்கத்தோடும் இரக்கத்தோடும் கூடிய குரலுடனும் பார்வையுடனும் மனோகரர்பின்னுந் தொடர்ந் துரைப்பாரானார்.“அந்தமேற்கரை மன்னர் தங்கள் தந்தை யாரின் துன்பமுடிவைத் தங்கட்கு இதுகாறுந் தெரியாமல் மறைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/276&oldid=1581554" இலிருந்து மீள்விக்கப்பட்டது