உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் 13

வைத்தது நிரம்பவும் அன்பான எண்ணத்தினாலே தான். ஆயினும், இப்போது நீங்கள் ஒவ்வொன்றுந் தெரிந்து கொள்ள வேண்டுவது இன்றியமையாததாயிற்று. நீங்கள் நீலகிரி நகருக்கு வந்ததும், இவ்வரலாறுகளையெல்லாம் என் வாயினின்றுந் தெரியப்பெறுவீர்களென்பது சாக்கியதர்மருக்குத் தெரியும். ஆகவே, அக்கதையை முற்றுஞ் சொல்லி விடுகின்றேன். யான் கூறியபடியே,சாக்கிய தருமர் அந்த அழகிய தோற்றம் வாய்ந்த இளைஞன் தன் இளங்குழவியின் முகத்தைத் துயரத்தோடும் பார்த்துக்கொண்டு ஓர்யாற்றங்கரைமேல் அமர்ந்திருக்கக் கண்டார்: நிறைந்த இரக்கத்தோடும் வினா வினார். அப்போது, ஐயோ! நீலலோசனரே, ஒரு துயரமான அறிக்கையைக் கேட்டதற்கு ஆயத்தமாய் இருங்கள் அவ்விரங் கத்தக்கஉயிர் அறிவிழந்திருத்தலை அவ்வரசர் கண்டு கொண்டார்.”

இப்போது நீலலோசனன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோடிற்று; குமுதவல்லியும் அங்ஙனமே அழுதாள். வணங்கத்தக்க மனோகரரும் பெரிதும் மனம் உருகினார். திரும்பவும் அவர் கதையை துவங்குவதற்கு முன் சிலநேரஞ் சென்றன.

முடிவாக அவர் தொடர்ந்துரைப்பார், "இரங்கத்தக்க அவ்விளைஞனையும் குழந்தையையும் மேற்கரையிலுள்ள தமது அரண்மனைக்குக்கொண்டு போகும்படி அவ்வரசர் கட்டளை யிட்டார்; புதியராய்வந்த அவ்விருவரையும் அங்கே எல்லா அன்போடும் நடத்தினார்கள். என்றாலும், நீலலோசனரே, தங்கள் தந்தையின் வாயிலிருந்து அவர் ஏதும் வெளிப்படுத்தக் கூடவில்லை: அவ்விளைஞர் தமதறிவை இழந்து வரவர உயிர் துறக்கும் நிலையை அடையலானார்.பின்னுஞ் சிலநாட்கழித்துத் தாங்கள் பெற்றோர் அற்ற பிள்ளையாயினீர்கள்! உங்களிரு வரையும் இன்னா ரென்று அறிவிக்கத்தக்க அடையாளம் ஏதும் உங்கள் தந்தையின் உடுப்புகளிற் காணப்பட வில்லை; நாகப்பூரில் நடந்தவை எல்லாம் நிலைவா மின்றிச் சிறுபேச்சாய் மேற்கரை ந கரில் தெரிந்தமையால் சாக்கிய தர்மரது அரண்மனையில் இறந்தவர் நாக நாட்டின் இளவரசர் தாமோ என்னும் ஐயுறவுக்கும் இடம் உண்டாகாதிருந்தது. அங்ஙனமிருந்தாலும், அப்போது நீங்களும் உங்கள் தந்தையும் அணிந்திருந்த ஆடைகளை அவர் காப்பாற்றி வைத்திருந்தார்; அவ்வாடைகளோ இறந்துபோனவர்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/277&oldid=1581555" இலிருந்து மீள்விக்கப்பட்டது