உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

——

249

தாழ்ந்த தரத்தில் உள்ளவரே என்று குறிப்பிட்டன. அவ்வரசர் தங்களை வளர்த்து வந்தார் எவ்வளவு நன்றாகவும் எவ்வளவு மென்மை யாகவும் என்பதனைத் தாங்களே மிகவும் நன்றாய் அறிவீர்கள்!”

66

‘அவர் எனக்கு ஒரு தந்தை போலிருந்து வருகிறார்!” என்று நீலலோசனன் நன்றியறிவோடும் வியந்துரைத்தான். “என் பெற்றோர்கள் இறந்து போயினார்களென்று அவர் எப்போதும் யானறியச் சொல்லி வந்தார்; அதைப்பற்றி நான் கேட்டபோதெல்லாம் அவர் என் அதனை நழுவவிட்டு வந்தார் என்பதை இப்போது நான் மிகவுஞ் செவ்வையாக அறியப்பெறுகின்றேன். ஆம் மிக்க அன்பினாலும் ஆழ்ந்து ஆராய்ந்த எண்ணங்களாலுமே அவர் அங்ஙனஞ் செய்யலானார்!”

எனது குழவிப்பருவத்திலேயே

66

அவ்வரலாறுகளை

யெல்லாம், பொதித்துவைத்த அவ்வாடைகளோடும் அம்மேற்கசையரசர் எனக்கு அனுப்பி வைத்தார்: இவைகளெல்லாவற்றையும் யான் கோச்செங்கண் மன்னர்க்குத் தெரியப்படுத்தினேன். போற்றத்தக்க எண்முதிய நண்பர் அவ்வாடைகளைப்பார்த்ததும் உடனே அவற்றை தெரிந்துகொண்டார்; பல ஆண்டுகளுக்குமுன்னே அரிட மன்னன் படைமறவர் எதிர்த்துச் சண்டை செய்தபோது நாகப் பூரிலிருந்து அவ்விளரசன் தங்களைக் கையிலெடுத்துக்கொண்டு தப்பிஓடுங்காற்பூண்டிருந்த இழிந்த ஆடைகளே அவை. இங்ஙனமாக, நீலலோசனரே தங்கள் பிறப்பைப்பற்றி இனி ஏதும் ஐயம் இல்லையாய் ஒழிந்தது; நீங்கள் பௌத்தராகவும் பௌத்த சமயத்திற்கு உரியராகவும் வளர்க்கப்பட்டு வந்தீர்கள். என்றா லும், உண்மையில் தாங்கள் நாகநாட்டின் இன அரசரேதாம்; தாங்கள் பிறந்தகாலத்தில் தங்கள் நெற்றியின்மேல் திருநீறு அணியப் பட்டிருந்ததும் உண்மையேதான். போற்றத்தக்க உங்கள் பாட்டனார் தங்களைத் தம்கைகளாற் றழுவிக்கொள்ள ஆவலித் தார்; ஆனாலுத், தாம் உயிரோடிருக்கும்போது தங்கள் பிறப்பைப்பற்றிய மறைபொருள் தங்களுக்கு வெளிப்படுத்தப் படுமாயின் நேராமல் தடுப்பதற்குத்தாம் எண்ணிய நிகழ்ச்சிகள் விளையவுங் கூடுமென அவர் அஞ்சினார். அரிட மன்னனைச் சேர்ந்தவர்களோ நீண்டநாட்கு முன்னே அவர் இறந்து போனாரென்று நம்பினார்கள்; அவர் உயிரோடிருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/278&oldid=1581556" இலிருந்து மீள்விக்கப்பட்டது