உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் – 13

என்பது அவர்களுக்குத் தெரிந்தால், அவருடைய செல்வாக்கு நாகப்பூர் அரண்மனையில் இன்னும் ஏதேனுந் தொல்லையை உண்டுபண்ணக் கூடுமென்று அவர்கள் எண்ணலாம்; அதனால் தன்பேர்த்தியின் -- அழகிய குமுதவல்லி தங்களின் - ஆளுடனார் அத்தனை நீண்டகாலமாய் இருந்து வந்த அதே இன்பஉறையுளில் தாங்கள் போய் ஒதுங்கியிருக்கலா மன்றோ? நீலலோசன, தங்களைப்பற்றியே வென்றால், சைவசமயத்தைத் தழுவுதலாகிய அவ்வழி ஒன்றுமே தாங்கள் அப்பெரும்பேற்றைப்

தாங்கள்

பெறுதற்குத்தக்கவராகச் செய்யுமாதலால், அம்மறைப்பொருளைத் தெரியும் பொருட்டு அதற்கு ஏற்றபடியாக நடந்து கொள்வீர்களென்று அவர்நம்பிக்கை வைத்திருந்தார். தங்களுக்கு அணுக்கமாயும் நலந்தருவனவாயு முள்ள செய்திகளாயிருப்பதோடு, எழுத்தில் எழுதித் தொவிக்கக் கூடாத அத்துணைச்சிறந்த மறைபொருளாயும் இருந்தமை யாலே, இவைகளையெல்லாம் தாங்கள் என்வாயினின்றே கேட்டுத்தெளியும்படி தாங்கள் இருவருமே இந்நீலகிரிநகருக்கு வருகவென வேண்டி என்னுடைய ஆள் சந்திரனிடத்தில் ன திருமுகங்கட்கு கொடுத்தனுப்பினேன்.” என்று மனோகரர் தாடர்ந்துரைத்தார்.

"மாட்சிமைமிக்க மனோகரரே, அம்மோதிரங்களையும் கூட அனுப்பியதேன்?" என்று குமுதவல்லி வினாவினாள்.

66

ஒன்றை யொன்றொத்த மோதிரங்களைத் தங்களிருவர்க் குந் தனித்தனியே யான் அனுப்பியதன்நோக்கம் இரண்டுண்டு. முதலாக, என் ஏவலாள் சந்திரன் இவ்வழிப்பயணத்தினின்று திரும்பி வீட்டுக்குவரும்போது, தற்செயலாய் அவனுக்கு ஏதேனும் இடர்நேர்ந்தால், இம்மோதிரங்களைக் கொண்டு வந்து காண்பிப்பவர்களே என்னுடைய கடிதங்களைப் பெற்றவர் களாயிருக்க வேண்டுமென்னும் உண்மை என் உள்ளத்திற்கு இசைவாகக் காணப்படும்; அதனால், கரவாடமான மக்கள் செய்யும் சூழ்ச்சிகளில் அகப்பட்டு ஏமாறுதற்கும் இடம் உண்டாகாது. அம்மோதிரங்களை உங்களுக்கு யான் அனுப்பிய தற்குள்ள எனது இரண்டாவது காரணத்தை சிறிது விரித்துச் சொல்ல வேண்டுவதாயிருக்கின்றது.யான்முன்னமே கூறியபடி, கோச்செங்கண் மன்னர் இறந்தபின், அவ்வுயர்ந்த மறைப் பொருளை வைத்திருப்பவன் யான்ஒருவனே யானேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/279&oldid=1581557" இலிருந்து மீள்விக்கப்பட்டது