உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

6

251

ஆனாலும், அதனை முழுதும் நான்ஒருவனே வைத்திருப்பது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; ஏனெனின், எனக்கோ வாழ்நாள் முதிர்ந்துவிட்டது, என்னையும் எந்த நேரத்திலேனும் காலன்வந்து பற்றிக்கொண்டு போகக்கூடும். ஆனதனால், சிறிதுங் காலந்தாழாமல், அம்மறைப் பொருளைப் பற்றிய எல்லாக்குறிப்புகளையும் முற்றும் விரித்து ஏட்டில் வரைந்து வைத்தேன். மற்றொருமுறியில் யான் உயிரோடிருந்து என்வாயாற் சொல்லவேண்டுமென்று என் ஐயன் கொண்ட திருவுளப்பாங்கின்படியே அதனைப்பற்றிய நீண்டவரலாற்றி னைப் பொறித்து வைத்தேன். இம்முறிகளைச் செவ்வையாய் உறையிலிட்டு முத்திரை வைத்து, யான் இறந்த பிறகு என் குறிப்புகளைக் கொண்டுநடத்துவோரிடத்து, ஒரு குறிப்பான தன்மை வாய்ந்து ஒன்றையொன்றொத்த இரண்டுமோதிரங் களைக் கொண்டுவந்துகாட்டும். இருவர்மட்டுமே இக்கட்டைத் திறந்து பார்க்கவேண்டுமென்று அதன்மேற்கற்பித்தெழுதித் தனியேயுள்ள என் ஏடுகளினிடையே அதனை வைத்து விட்டேன். நீங்கள் வருவதற்குமுன்னமே என்னை இங்கிருந்தும் அழைத்துக் காள்வது இறைவனுக்குத் திருவுளமானால், நான் சொல்லிக் காண்டு வந்த உண்மைகளையேயன்றிச் சாலப் பெரிய அம்மறைப்பொருளினையும் உங்களுக்குத் தெரிய வைக்கும்படி சய்யவேண்டிய ஒவ்வோர் ஏற்பாட்டினையும் அங்ஙனம் முன்னதாகவே மிகவுங் கருத்தாய்ச் செய்து வைத்தேன். என்றாலும், நீலலோசனரே, அப்போதும் அம்மறை பொருள் உங்களுக்குத் தெரிவிக்கப்படமாட்டாது; நான் முன்னமே குறிப்பித்திருக்கிற வகைப்படி நீங்கள் அத்தூய மறைப்ெ பாருளைப் பெறுதற்கேற்ற தகுதியைத் தங்களிடம் வருவித்துக் கொண்டாலன்றி, அத்தனித்த முறிச்சீட்டுக் குமுத வல்லி கண்களுக்கு மட்டுந்தெரியும்படி வரைசெய்து வைக்கப் பட்டது.”என்று மனோகரர் விடை பகர்ந்தார்.

பின்னர்ச் சிறிது நேரம் மனோகரர் பேசாதிருந்தார் நீலலோசனனோ சிலநேரம் ஆழ நினைத்துப் பார்த்துப் பணிவான குரலிற் பேசலானானான். “போற்றத் தக்க என் நண்பரே, தமது குழவிப்பருவந்தொட்டப் பயிற்றப்பட்டு வந்தமையால் தமக்கு நன்றாய்த்தெரிந்தான். ஒருசமயத்தைக் கைவிட்டுத்தெரியாத மற்றொன்றைக் கைப்பற்றுவது எவர்க்கும் எளிதான செய்கை அன்று. ஆனதனால், எனக்குத் தெரியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/280&oldid=1581558" இலிருந்து மீள்விக்கப்பட்டது