உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 13

தான இச்சமயக் கொள்கைகளை எனக்கு எடுத்து அறிவுறுத்துக யான் குழந்தையாயிருந்த போது எனது நெற்றியின் மேல் இடப்பட்ட அடையாளத்திற்கு உரியதான அக்கொள்கை என் மனச்சான்றுக்குப்பொருத்தமாகக் காணப்படுமானால், என் பாட்டனார் விருப்பப்படியும், தகவுமிக்க மனோகரரே தங்கள் விருப்பப்படியும் அதனைத்தழுவிக்கொள்வேனென்று உறுதி

யாய் நம்புங்கள்.”

66

அரசி, நாங்கள் இருவேமும் சிறிதுநேரம் ஒருங்கு தனித்திருக்கும் படி விடை தாருங்கள். தங்கள் மைத்துனர் சொல்வது செவ்விதாய் இருக்கின்றது; அவர் முற்றிலுந் திரும்பிவிடுவாரென்பதில் யான் சிறிதும் ஐயமுறவில்லை. மாட்சிமைதங்கிய தாங்கள் இங்கே திரும்பிவரும்படி சிறிது நேரத்தில் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்." என்று அம்மலைய வியாபாரி கூறினார்.

குமுதவல்லி அங்ஙனமே அவ்வறையைவிட்டுச்சென்று, தானிருக்கும் அறைவரிசைக்குள் தனித்திருக்கலானாள். தான் கேட்டவைகளைப் பற்றியெல்லாம் ஏதுந்தடையின்றித் தனியே யிருந்தது நினைத்துப்பார்ப்பதற்கு அவள் விரும்பினாள்; ஆகவே, கீழுள்ளதோட்டத்திற்கு இறங்கிப்போய் அங்கே அயர்வு தீர்ந்திருக்கும்படி அவன் தன்தோழிமார்க்குக் கற்பித்தாள். அங்ஙனமே அவர்கள் அவனை விட்டுப்போனபிறகு அவள் சாய்மனைக்கட்டில் ஒன்றன்மேல் அமர்ந்து எண்ணமிடு வாளானாள். முடிவாகப்பார்க்குங்கால், அவ்வறிவோள் சொல்லியகதை உண்மையோடு தெளிவாய்த் திட்டமாய் ஒத்திருந்தது; ஏனென்றால், இப்போதுதான் மனோகரர் வாயினின்று பிறந்த வரலாற்றின் ஒரு பகுதியோடு அது மிகவும் வியக்கத்தக்கவாறாய்ப் பொருந்தியிருந்தது. ஆம், திகழ்கலை என்பவள் கோச்செங்கண்மன்னர் முகத்தைப் பார்த்தவளே யாவள்! நாகநாட்டரசியலினின்று நீங்கிய அம்மன்னர் அத்தனை ஆண்டுகளாகத் தாம் புகலிடமாய்க்கொண்டிருந்த அவ்வின்ப நிலத்தினுள்ளே அவள் சென்றதுண்டு! தான் திகழ்கலையைத் தற்செயலாய் எதிர்ப்பட்டதும், இன்னும் மனோகரர் வாயினின்று முழுதுந் தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டுவதாய் உள்ள புதுமையான மறையின் உட்பொருளைத் தான் அங்ஙனமே முன்னறியலானதும் புதுமையல்லவோ வென்று குமுதவல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/281&oldid=1581560" இலிருந்து மீள்விக்கப்பட்டது