உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அதிகாரம் - 16

குமுதவல்லியும் நீலலோசனனும்

கதவைத்தட்டி முன் அறிவித்துவந்தமையால் குமுத வல்லியிருக்கும் அறைக்குச் சந்திரன் இங்ஙனம் காணவந்ததில் மதிப்புக்குறைச்சலேனும் தகாததேனும் ஏதும் இல்லை; ஏனெனில் பௌத்தர்களில் உள்ளதுபோலப் பெண்மக்கள் தனித்திருக்க வேண்டுமென்னுங் கடுமையான வழக்கம் மேற்கணவாய் மலைநாடுகளில் உள்ள சைவசமயத்தவர்களில் இல்லை. என்றாலும், சந்திரன் அங்கேவந்து வழக்கத்திற்கு மாறானது போல் குமுதவல்லியினுள்ளத்திற் படுவதாயிற்று. என்னை யெனின், மாட்சிமை தங்கிய மனோகரர் தனக்குச் செய்தி அனுப்பியிருந்தால் அவ்வீட்டுமுதியோள் வாயிலாகவாவது அல்லது வேறோர் ஏவற்காரி வாயிலாகவாவது அனுப்பி யிருக்க வேண்டுமென்பது அவளுக்குடனே தோன்றுவதாயிற்று. மனோகரரோடு தாம்பேசிக்கொண்டிருந்த போது தான் சந்திரனைப்பற்றிக் கொண்ட ஐயுறவை உறுதிப் படுத்தத்தக்கது

ஏது

ம்நேரவில்லை; அவனது நம்பிக்கைத் தனத்தைப் பற்றி மனோகரர் அவனைப் புகழ்ந்தே பேசியிருக்கின்றார். வேண்டி யழைத்த மனோகரரின் திருமுகங்களையும், மோதிரங்களையும் ஒவ்வொருவரிடமும் அவன் சேர்ப்பித்த காரணத்தாலே, தன்னை நோக்கியும் பெருமான் நீலலோசனனை நோக்கியும் அவர் அவளிடம் நம்பி ஒப்புவித்த செய்திகளை அவன் நேர்மையுடன் கொண்டுவந்து செலுத்தினானென்பதும் நன்கு விளங்கிற்று.

இ இவ்வெண்ணங்கள் குமுதவல்லியின் உள்ளத்தில் விரை விற் றோன்றிமறைந்ததும், அரசியாயிருக்கும் தனது உயர்ந்த நிலைமைக்கும், ஏவலனாயிருக்கும் அவனது நிலைமைக்கும் ஏற்றபடியாகச் சந்திரனிடம் இனிய நோக்கத்தோடு பேச வேண்டுமென அவள் முன்னிலையிலும் பார்க்கத் தீர்மானஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/283&oldid=1581573" இலிருந்து மீள்விக்கப்பட்டது