உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

255

செய்தாள். ஆனதனால், அந்தஒழுங்கின் அளவுக்கு, அவள் அவன் மிகவுந் தாழ்மையோடும் பணிவோடும் தொலைவிருந்தே செய்த வழிபாட்டை ஏற்றுக்கொண்டனள்; தான் பேசுதற்கு அவளு டைய கட்டளையை எதிர்பார்த்தவனாய்ப் பணி வோடும் அவன் சிறிது தொலைவில் நிற்கையில், “சந்திரா, நீ சொல்ல வேண்டி யதைச்சொல். நீ இங்கேவந்த காரணம் யாது?” என்று அவள் வினவினாள்.

“அருள்நிறைந்த அரசி,” என்று அவ்வேலவன் விடைபகர் வானாய் மறுபடியுந்தாழப்பணிந்து, “முதலாவது, பெருமாட்டி யாரிடம் அடியேனது வணக்கத்தைத் தெரிவிப்பதற்கு ஏற்ற ஒரு நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்; இரண்டாவது, அடியேன் கேட்கவிரும்புஞ் சிலகேள்விகளுக்குப் பெருமாட்டி யார் அருள்கூர்ந்து விடையளிப்பீர்களாயின் மனமகிழ்ந்தவன் ஆவேன்.” என்றான்.

அவன்என்ன கேள்வி கேட்கக்கூடுமென்று வியப்புற்ற வளாய், “நல்லதுசொல் சந்திரா.” என்று கூறினாள் குமுதவல்லி.

“நாகப்பூரிலிருந்தபோது பெருமாட்டியார் அவர்களிடம் அடியேன் செய்தி கொண்டுவந்து சேர்ப்பித்தவகையைப்பற்றி என் உயர்குணத்தலைவரிடத்தில் அரசியார் உயர்த்தி நயப்பாய்ப் பேசியிருப்பீர்களென்று அடியேன் எண்ணிக்கொள்ளலாமா? நான்எடுத்துவந்த திருமுகத்தில குறித்த நாளையும், நான் நாகப்பூரிலுள்ள தங்கள் அரண்மனையில் வந்து சேர்ந்த நாளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வழியில் இடையேயான் தங்கியிருக்கக் கூடுமா என்பதைத் தாங்கள் தீர்மானம் பண்ணிக் காண்டிருக்கலாம். தாங்கள் மலைநாட்டிற்குள் வரும்போது எவர்க்குந் தெரியாதபடி வரும்படிக்கும், எவரும் உறுத்துப் பாராத ருபாதையை தொடர்ந்துவரும்படிக்கும் யான் தங்களை வேண்டிக்கொண்டதெல்லாம் என்தலைவர் கற்பித்த வண்ணம் யான் செய்தனவேயாகும் என்பதை அரசியார் மாட்சிமைமிக்க என் தலைவர் வாயினின்றே வேண்டிய அளவுக்குக்கேட்டுத் தெளிந்திருப்பீர்கள்.” என்று அவ்வேவற் காரன் கூறினான்.

66

உன் தலைவரோடு சிறிது நேரத்திற்குமுன் யான் பேசிக்கொண்டிருந்தபோது இவைகளைக்குறித்து நாங்கள் உண்மையாகவே ஏதும்பேசவில்லை, சந்திரா; ஆனாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/284&oldid=1581581" இலிருந்து மீள்விக்கப்பட்டது