உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 13

மாட்சிமிக்க மனோகரர் எனக்குத் தெரிவித்தவைகளிலிருந்து, யான் நீலகிரி நகரத்திற்கு வரும் பயணம் மிகவும் மறைவாக இருக்கவேண்டுமென்பதே முதலிலிருந்து அவரது விருப்பமாகு மென்பதை யான் ஐயமறத் தெரிந்துகொண்டேன். அதுவேயு மன்றி, யான் அரசியல்நிலைக்கு உரியவள் என்பது புலப்படாமல் செவ்வையாய் மறைக்கப்படவேண்டுமென்பதும் அவரெழுதிய திருமுகத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்ததை யான் நினைவு கூர்கின்றேன்.”என்று நாகநாட்டரசி மறுமொழி புகன்றாள்.

"அப்படியானால்,

எல்லாவகையாலும் அரசியார் அவர்கள், என்னிடம் நம்பி ஒப்புவிக்கப்பட்ட சிறந்த செய்தியைத் தங்களிடம் கொண்டுவந்து யான் சேர்ப்பித்த வகையில் மனநிறைவடைந்திருக்கிறீர்கள்?” என்று சந்திரன் மொழிந்தான்.

“உனக்கு இகழ்ச்சி உண்டாகும்படி பேசுதற்கு ஏதும் காரணம் இல்லை என்பதைச் சந்திரா, உன் சொற்களிலிருந்தே நீ முன்னமே தெரிந்திருக்கலாமே. எனினும், என்னிடமிருந்து இவ்வுறுதிமொழிகளைக் கேட்கும் பொருட்டு நீ ஏன் இவ்வளவுகவலையுள்ளவனாய்த் தோன்றுகின்றாய்?” என்று அவ்வரசிவினாயினாள். ஓர் இமை கொட்டும் நேரம் குமுத வல்லி அவ்வேலவன் முகத்தை ஆராய்ந்து நோக்கினாள்: ஏனென்றால் அவனைப்பற்றி அவள் கொண்ட ஐயம் மறுபடியும் அவள் உள்ளத்தில் வலிவுற்றுத் தோன்றியது.

66

அதன் விளக்கத்தை உடனே சொல்லிவிடுகின்றேன். என்று முழுதுங்கரவற்றவெள்ளையுள்ளம் உடையவன்போல் அவ்விளைஞன் விடை கூறுவானானான்: முதலாவது, ஒவ்வொரு வரும் அரசியாரின் நல்லெண்ணத்தைப்பெறுதற்கு விரும்புவர்; இரண்டாவது, யான் பிறந்தது முதல் என்னை வளர்த்து, யான் தாய் தந்தையரை இழந்திருந்த காலத்திலும் என்னைப் பாதுகாத்துவரும் அருள் நிறைந்த என் தலைவர் மனோகரருக்கு என்னாலியன்ற எல்லாவகையிலும் இசைவாக நடந்துகொள்ள வேண்டுமென்பதே எனது பெருநோக்கம்; மூன்றாவது, பெருமூதாட்டி தாங்கள் இவ்விடத்தேவந்து சேர்ந்த நேரத்தில் தாங்கள் சொல்லிய சில சொற்களிலிருந்து, வரும் வழியில் தாங்கள் இடர் உற்றீர்களோ வென்று அச்சம் அடைந்தேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/285&oldid=1581589" இலிருந்து மீள்விக்கப்பட்டது