உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

259

அவ்விளைய ஏவலனுடைய சொல்லிலும் பார்வையிலும் செய்கையிலும் வெளித்தோன்றிய உண்மையினால், மக்களி யற்கையைப்பற்றி எப்போதும் மிகு நல்லெண்ணமேகொள்ளும் அருளியல்பு வாய்ந்த குமுதவல்லி தான்கொண்ட ஐய மெல்லாம் அகன்று போயினவென நினைத்தாள்; உடனே அவள் தனது விரலிலுள்ள விலையுயர்ந்த மோதிரம் ஒன்றைக் கழற்றிச், “சந்திரா, நாகப்பூரிலிருந்த என்னிடம் நீ செய்தி கொண்டுவந்த காலையில் நீ அதனை நம்பிக்கைக்குப் பழுதுவராமற் செலுத்திய தன்மையை யான் உவந்து கொண்டதற்கோர் அடையாளமாக இதனை நீ ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே அதனை நீட்டினாள்.

சந்திரன் உடனே தாழ்ப்பணிந்து, “அருள்நிறைந்த அரசி, தாங்கள் இதற்கு நீட்டின இப்பரிசிலை யான் ஏற்றுக் கொள்ளாதது பற்றி அடியேனை மன்னித்தல் வேண்டும். நாகப்பூரில் அரசியார் அடியேனுக்குச் சிறந்த ஒரு பரிசில் அளித்தீர்கள்; தாங்கள் அடியேனை உவந்து ஈந்த அவ் அடை யாளத்திற்காக யான்உள்ளங்குளிர்ந்தேன். இப்போது பின்னும் ஒருபரிசிலை யான் ஏற்றுக் கொள்வேனாயின், உண்மையில் ஒரு நன்கொடை பெறும் நோக்கத்தைமறைத்து வணக்கஞ் செலுத்தும்பொருட்டுத் தங்கள் முன்னேவந்தவன் போல் அரசியார்கருதவுங் கூடும். தங்கள் எண்ணத்தில் யான் நன்கு மதிக்கப்பட்டிருக்கின்றேனா என்பதையும், தாங்களும் மாட்சி நிறைந்த என் தலைவரும் ஆண்மைமிக்க பெருமான் நீலலோசனரும் யான் நாகப்பூருக்கும் மேற்கரைக்கும் செய்தி கொண்டு வந்து சேர்ப்பித்த வகையில் மனம் உவந்தனரா என்பதையும் உறுதியாகத் தெரிவதொன்றே எனது நோக்கமாகும்.” என்று மறுமொழி பகர்ந்தான்.

வ்வாறு சொல்லியதும், சந்திரன் நாகநாட்டரசி யினிடத்தில் மிகுந்தவணக்கம் உடையான்போற் பணிந்து, விரைவில் அவ்வறையை விட்டு வந்தான்.

அவன் தனக்குப் தனக்குப் பின்னே கதவு சாத்திக்கொண்டு போனதும், குமுதவல்லி அம்மோதிரத்தைத் திரும்பவுந் தன் விரலில் இட்டுக்கொண்டவளாய்த் தன்னுள் எண்ணுவாள்: "உண்மையில் யான் இவ்விளைஞனுக்குப் பிழை செய்தவளா னேன். வன் இழிந்த இரண்டகமான செய்கையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/288&oldid=1581614" இலிருந்து மீள்விக்கப்பட்டது