உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் - 13

ல்

6

செய்யமாட்டாதவனாய், மிக உயர்ந்த சிறந்த எண்ணங்கள் உடையவனாய்த் தோன்றுகின்றான். இவனுடைய எண்ணத்திற்கு மாறாகுமென்று நினைத்து இப்பரிசிலை இவன் வாங்கிக் கொள்ளும்படி இப்போது இவனை நானும் நெருக்க வில்லை. வேறுநேரம் பார்த்து இவனுக்குத்தக்க நன்கொடை அளிக்க வேண்டும். இறந்துபோகுந்தறுவாயில் மீனாம்பாள் வாயில் நிலைதடுமாறிப்பிறந்தபெயர் வேறொருவனுடைய தாகவே இருக்க வேண்டும்! மற்று அப்பெயர் யாதாயிருக்கலாம்? எவரைப்பற்றிநான் விழிப்பாய் இருக்கவேண்டும்? ஆ! அத் துணைச் சிறுகாரணத்தைக் கொண்டு யான் சந்திரனைப்பற்றித் தீதாய் நினைத்தது முற்றும் பிசகு! நீலலோசனனைப் பற்றி நினைத்ததில் எவ்வளவு புதுமையாக நான் ஏமாற்றம் அடைந் தேன்! ஆண்மையிற் சிறந்த என் மைத்துனனைப்பற்றி நான் பிழைபட நினைந்தது எவ்வளவு கொடுமையானது! இனி வெளித்தோற்றத்தைக்கண்டாவது, நிரம்பா மன ஐயுறவு காண்டாவது இத்தகைய முடிபுக்குத் திடுகூறாய்வரற்பாலேன் அல்லேன்." இப்போது சுந்தராம் பாளும் ஞானாம்பாளும் இவளிருந்த அறைக்குத் திரும்பி வந்தார்கள்; குமுதவல்லியும் அவர்களை நோக்கி, “வாருங்கள், தோழிகாள், என்பக்கத்தில் இருங்கள்; யான் நுங்கட்குத் தெரிவிக்கவேண்டிய சில அறிவிப்புகள் இருக்கின்றன." என்றாள்.

எஞ்ஞான்றும்

னி

அழகும் நம்பிக்கையும் வாய்ந்த அப் பெண்களிருவரும் இளம் பெருமாட்டியின் அண்டையில் உடனே அடிமனைகளின் மேல் உட்கார்ந்தார்கள். அவ்வரசியார் தமக்கு எதனைத் தெரிவிக்கத் தாழ்ந்தருள்வரோ என்று அவர்கள் ஆவலோடும்

எதிர்நோக்கியிருந்தார்கள்.

முதல்முதல் மங்கையீர் என்னுடைய தவறுதலால் உங்கள் உள்ளத்தில் உண்டான ஓர் எண்ணத்தை அங்கு நின்றும் அகற்றுவதற்கு ஒரு நொடிப் பொழுதுகூட யான் தாழத்த லாகாது. பெருமான் நீலலோச னரைக்குறித்துத் துவக்கத்தில் மிகவும் பாராட்டிப்பேசிய நீங்கள், அவரைப் பற்றி யான் கொடுமையாகவும், துயரப்படும் படியாகவும் பிழைபட எண்ணி நடந்தேன் என்பதை இப்போது தெரிந்து நிரம்பவுங் களிப்படைவீர்கள்; அவர் கொள்ளைக் கூட்டத் தலைவனான நல்லான் அல்லர்; அவர் இப்போது இளவரசுப்பட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/289&oldid=1581623" இலிருந்து மீள்விக்கப்பட்டது