உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

261

இருப்பவராயும், இன்னும் உயர்ந்த ஒருநிலையைப் பெறுதற்கு ஏற்ற மெய்யான உரிமை யுடையராயும் உள்ள மிக மாட்சிமைப் பட்ட ஓர் இளம் பெருமானே யாவர்! என்று குமுதவல்லி கூறினாள்.

இச்சொற்களைக் கேட்ட அளவில் சுந்தராம்பாள் ஞானாம்பாள் வாயினின்று களிப்புரைகள் வியப்புடன் எழுந்தன. முதலிற்சொன்ன பெண்ணின் மெல்லிய கரிய மடமான் விழிகளிலும், அங்ஙனமே அழகிய மற்றப் பெண்ணின் பழுப்புநிறக்கண்களிலும் அம்மகிழ்ச்சிக்குறிப்பு ஒளியுடன் கிளர்ந்தது; சிறிதுகாலத்திற்குமுன் எண்ணியதற்கு வேறாகத் தான் இப்போது நீலலோசனனைப்பற்றி எண்ணக் கூடிய வளானதை நினைந்து குமுதவல்லி தன் பட்டுப்போன்ற கன்னங்களில் ஒரு பொலிவுகொள்ளப் பெற்றாள்; இந்தப் பொலிவு மனக்குறை

வினால் தோன்றியதன்று.

66

ன்னும் நான் சொல்லவேண்டுவது மிகுதியாயிருக் கின்றது. மாதரீர்; எனினும், இப்பொழுதிற்கு யான் வெளி யிட்டுரைக்கப்போவது ஒரு மறைபொருளாகும்; ஏனென்றால் மாட்சிமைமிக்க மனோகரர் இதனையடுத்து என்ன ஏற்பாடுகள் செய்ய எண்ணியிருக் கிறாரென்பது எனக்கு இன்னுந் தெரியாது. சுருங்கச் சொல்லுங்கால், உங்களுக்குப் பெரியவியப்பினைத் தரும் ஒரு செய்தியைச் சொல்லப்போகின்றேன்.” என்று தொடர்ந்துரைத்த குமுதவல்லி சிறிது நின்று, பிறகு அழுத்த மாகவும் அடங்கிய மகிழ்ச்சியோடும், “நீலலோசனர் எனக்கு மிகநெருங்கிய உறவினர் -- அவர்கள் உரிமை மைத்துனர்!” என்று கூறினாள்.

அவ்விளந்தோழிப்பெண்கட்கு இச்செய்தி ஒரு வியப்பி னைத்தருவதாயிருந்தது. அத்தகைய உறவினரைத் தான் பெற்றதற்காகத் தன்னை பெருமைபாராட்டிக் கொள்ளலாம் நிலையிலுள்ள தம் தலைவியின்மேல் அவ்விருவரும் ஒருங்கே வாழ்த்துரை சொரிந்தார்கள்.

66

ஆம் மகளிர்காள், இது மெய்ம்மைதான். சிறிது நேரத்திற்கு முன்னே தான் இஃதெல்லாம் அம்மலைய வியாபாரியின் வாயினின்று கேட்டுணர்ந்தேன். அவர் அன்பான நெஞ்சமும் அருட்குணமும் வாய்ந்த சிறந்த முதியவர். இதற்குமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/290&oldid=1581631" இலிருந்து மீள்விக்கப்பட்டது