உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 13

இதனைப்பற்றி யான் ஒன்றும் அறியேனாயினும், தாம் எனது குடும்ப நன்மைகளைக் கோரிய வலிய நண்பர் என்பதை மெய்ப்படுத்தி யிருக்கின்றார். என் மைத்துனர் நீலலோசனரைப் பற்றியோ வென்றால், எமக்குள் அவ்வுறவு எங்ஙனம் உண்டாயிற்று என்பதைத் தோழிகாள், நீங்கள் எண்ணிப் பார்க்கத்தவற மாட்டீர்கள்; ஏனெனில், இரங்கத்தக்க என் மாமனார் என் தாயோடு உடன்பிறந்த தம்பியார் -- தம் கையிற் குழந்தையோடு நாகப்பூரைவிட்டு அகன்றுபோன கதையை நீங்கள் அடுத்தடுத்துக்கேட்டிருக்கின்றீர்கள். அந்த மகவு பெரிய பிள்ளையாய் வளர்ந்தது மேற்கரைநாட்டின் அரசரான

——

சாக்கியதர்மர் தமக்கு மருமகனாக எடுத்துக்கொண்ட அவ்விளைஞரே இன்றைக்கு என் மைத்துனனாயிருக்கக் கண்டேன்.” என அவள் தொடர்ந்தரைத்தாள்.

அங்ஙனங் கேட்ட வியப்பான செய்திகள் எல்லா வற்றையும் பற்றித் தாம் அடைந்த மகிழ்ச்சியையும் இறும் பூதினையும் தெரிவிக்கச் சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் போதுமான சொற்கள் காணாராயினர். இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வீட்டு முதியோள் உள்ளே வந்தமையால் அது தடைபட்டது; வந்தவள், “பெருமாட் டியாரவர்கள் மறுபடியும் என் மாட்சிமைப்பட்ட தலைவரிடம் வந்தருளுதற்குத் திருவுளம் பற்றல் வேண்டும். முன்னே தாங்கள் கண்டு பேசிய அந்த அறை யிலேயே அவர் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.’ என்று சொன்னாள்.

மனோகரர் வரவேற்கும் அறைக்குக் குமுதவல்லி மறு படியுஞ் சென்று கொண்டிருக்கையில், அவளது உயர்ந்த நிலைமையானது அவ்வீட்டிலுள்ள ஏவற்காரர் எவர்க்கும் பெரும்பாலும் தெரிய மாட்டாதென்பதனைச் சொல்லி டுகின்றோம். அதனை நிரம்பவும் மறைபொருளாய் வைத்தி ருக்க வேண்டுமெனச் சந்திரன் கற்பிக்கப்பட்டான்; தன் தலை வரின் கட்டளைகளுள் என்றான இதனை அவன் மீறி நடப்ப தற்கும் ஏதுவில்லை. நாகநாட்டரசி நீலகிரி நகரத்தில் வந்து தமது ட்டில் தங்கியிருக்கின்றாள் என்பது எந்த வகையாலும் வெளியே தெரியாதபடி மறைவிடமாய் வைக்கப்பட வேண்டு மென அம்மலைய வியாபாரி எண்ணங் கொண்டிருந்தார்; ஏனெனில், அவர் அவளை அங்கு வரவழைக்கும்படி தூண்டின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/291&oldid=1581640" இலிருந்து மீள்விக்கப்பட்டது