உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

263

முதன்மையான அலுவலல்கள் மிகவும் மறைவாகவே வைக்கற்பாலனவாயிருந்தன; மேலும் அவளை அவர் மேற் கணவாய் மலைக்காட்டுகளின் இடையே அழைத்துச் சென்று, அவள் ஏற்கெனவே ஒருவாறு உய்த்துணர்ந்திருக்கின்ற மிகப் பெரிய மறைபொருளை அவளுக்கு முற்றிலும் அறிவித்தற்கு அவர் கருதியிருந்தமையால்., நாக நாட்டரசி அவரது மாளிகை யிற் றங்கியிருக்கின்றாள் என்பது வெளிப்புலப்படுமாயின், அஃது எதன் பொருட்டு என்று அறியப் புகுவதே வெளியார்க்கு இயற்கையாதலால் அவர்களுடைய இயக்கங்கள் உற்று ஆராயப்படாமல் மறைக்க வேண்டுவது இன்றியமையாததாக வேயிருந்தது. ஆனாலும், அப்போதைக்கு வேறொரு பெயரை வைத்துக் குமுதவல்லியின் பெயர் வெளியே தரிய வாட்டாதபடி மறைக்குமளவுக்கு அம் முன் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது ஒரு புதுமையாகத் தோன்றலாம்; என்றாலும், அம்மேற்கணவாய் மலை நாடுகளில் உள்ள பெண்பாலரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்க்குக் குமுதவல்லி என்னும் பெயரிட்டு வழங்கல் சைவர் பௌத்தர் என்றும் இருதிறத்தினரிலும் வழக்கமல்லாததன்று ஆதலால், அவ்வளவு உன்னிப்பான ஏற்பாடு வேண்டப்படுவதில்லை, எனவே, குமுதவல்லிப் பெயரிய பெருமாட்டியே நாக நாட்டரசியாவள் போலும் என்று ஐயமுறுவார் எவருமில்லை.

குமுதவல்லி மறுபடியும் மனோகரர் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தாள்; அவ்வியாபாரி மாத்திரம் அங்கே தனித்திருக்கவும் நீலலோசனன் அவருடன் இல்லாதிருக்கக்கவுங் கண்டாள். முன் அறையில் அவர் அவளிடத்தில் நடந்து கொண்ட வண்ணமே நன்கு மதிப்பும் நட்புங் கலந்த ஒரு தன்மையோடு அவ்வரசியை அவர் வரவேற்றார், அவர்தம் முதுமையும் அவள் பாட்டனாரோடு தாம் கொண்ட நெருக்க உறவும் அவளைப் பெற்றோர்க்குரிய அன்புடன் பாராட்டத் தூண்டினாலும் அவர் அவளது அரசியல் நிலையை மறந்து போகவில்லை.

“எனக்கு இனிய நட்பான இளைய அரசி, தங்களுக்கு யான் நல்ல செய்தி தெரிவிக்கப் போகின்றேன். தங்கள் மைத்துனர் யான் எடுத்துவிளக்கிய அவ்வுண்மைகளை உண்மையென்று ணர்ந்து ஏற்றுக் கொண்டார்; அவர் சைவ சைவ சமயத்தைத் தழுவிக் கொள்வார்!” என்றுரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/292&oldid=1581648" இலிருந்து மீள்விக்கப்பட்டது